
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை
பதிகங்கள்

குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம்
வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன்கள் பரதன் வலைகொணர்ந்து
இட்டனன் யாம்இனி ஏதம் இலோமே.
English Meaning:
Lord is a Fisher of DesiresOne cubit its depth,
Half cubit its diameter,
Thus shaped round is the body pond;
The Fisherman (Lord) His net spreads;
Many the fish (of desires) He caught;
No more — the troubles I encounter.
Tamil Meaning:
ஒவ்வொரு மனித உயிரையும் ஒவ்வொரு நீர்வாழ் உயிராகக் கருதினால் அவ்வுயிர் வாழ்வதற்கு உள்ள குளமும் ஒரு சாண் குறுக்களவுடைய வட்ட வடிவினதாய்த் தோன்றும். எனவே அதன் ஆழமும் ஒரு சாணளவே உள்ளதாக மதிக்கப்படும். ஆயினும் அவ்வாறின்றி ஒரு சாணுக்குமேல் கூடுதலாக ஒரு முழ ஆழம் உள்ளது. (குளம் - முகம். ஆழம் கழுத்திற்குக் கீழ் மூலாதாரம் வரை உள்ள இடம்.) மேற்குறித்த குளத்தில் ஐந்து கொடிய மீன்கள் உள்ளன. (அவை அந்நீர் வாழ் உயிரை அமைதியாக வாழ விடாமல் அலைக்கழிப்பன. மீன்கள், (ஐம்பொறிகள்) இந்த நிலைமை எமக்குந்தான் உள்ளது. இதனை அறிந்த ஓர் வலைஞன் எம்மிடத்தில் இரக்கங்கொண்டு வலையைக் கொணர்ந்து வீசினான். மீன்கள் தப்ப முடியாமல் அவ்வலையில் அகப்பட, வலைஞன் அவைகளைத் தான் எடுத்துக் கொண்டான். (சிவன் கருணை கூர்ந்து தனது சத்தியைச் செலுத்தி எமது ஐம்பொறிகளைத் தன்னையே பற்றியிருக்கச் செய்தான்.) அதனால் யாம் துயர் ஒழிந்தோம்.Special Remark:
எனவே, ஐந்திந்திரியங்களை அடக்குதற்கு இறைவனது திருவருளைப் பற்றி நிற்றலே வழி என்றதாயிற்று. ``வட்டம்`` என்பதன் பின் `ஆய்` என்பது வருவிக்க. ஐம்பொறிகளும் அமைந்த உறுப்பு முகம் ஆகையால் அதனையே மனித உயிர்க்கு இட மாகக் கூறினார். எனினும் ஏனைய பகுதிகளை, `குட்டம்` என்பதனால் தழுவினார். குட்டம் - ஆழம். `பரதவன்` என்பது இடைக் குறைந்து நின்றது. அவனது சிறப்புணர்த்தும் `ஓர்` என்பது ஆற்றலால் வந்து இயைந்தது. `இடுதல்` அதன் காரியம் தோன்ற நின்றது. ஏதம் - துன்பம்.இதனால், `ஐந்திரியங்களை அடக்கும் முறைகளுள் நேரிதாவது` இது என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage