
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை
பதிகங்கள்

ஐந்தில் ஒடுங்கில் அகலிட மாவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவ மாவது
ஐந்தில் ஒடுங்கில் அரன்பத மாவது
ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே.
English Meaning:
Sublimation is the Way to GraceIf the senses Five you sublimate
Then all worlds are yours;
That is tapas rare;
That is the Lord`s Feet too;
That indeed is the way to Grace receive.
Tamil Meaning:
இந்திரியங்களாகிய யானைகள் ஐந்தும் மதம் பிடித்துத் திரியாமல் ஆன்ம அறிவாகிய கூடத்திற்குள்ளே அடங்கி யிருக்குமாயின் அதுவே அறம், தவம், இறையுலகப் பேறு, ஞானம் எல்லாமாம்.Special Remark:
``ஐந்து`` என்பன தொகைக் குறிப்பு, அவை முன்னை மந்திரங்களின் தொடர்ச்சியால் `யானை` எனப் பொருள் தந்து, உருவக வகையால் இந்திரியங்களை உணர்த்தின. ``அகலிடம்`` என்றது ஆகுபெயரால், உலகியல் எனப் பொருள் தந்து அறத்தை உணர்த்திற்று. பின்னர் ``தவம்`` என வருதலால் அறம் இல்லறமாயிற்று. பதம் - பதவி. அருள் - சிவஞானம். `இவை யாவும் பொறியடக்கம் இல்லாத பொழுது விளையா` என்றற்கு, பொறியடக்கத்தையே இவையாக உபசரித்துக் கூறினார். `இல்லின்கண்` என ஏழாவது விரிக்க. முன்மந்திரத்தில் ``அறிவென்னும் தோட்டி`` என்றதனால், இங்கு ``இல்`` எனப்பட்டதும் அஃதேயாதல் விளங்கும். இங்கும் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.இதனால், எல்லா நன்மைகட்கும் இந்திரிய அடக்கம் இன்றியமையாததாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage