
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- ஏழாம் தந்திரம் - 1. ஆறாதாரம்
- ஏழாம் தந்திரம் - 2. அண்ட லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 3. பிண்ட லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 5. ஆத்தும லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்
- ஏழாம் தந்திரம் - 7. சிவலிங்கம்
- ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்
- ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு
- ஏழாம் தந்திரம் - 10.அருளொளி
- ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
- ஏழாம் தந்திரம் - 12. குருபூசை
- ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை
- ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை
- ஏழாம் தந்திரம் - 15. போசன விதி
- ஏழாம் தந்திரம் - 16. பிட்சா விதி
- ஏழாம் தந்திரம் - 17. முத்திரை பேதம்
- ஏழாம் தந்திரம் - 18. பூரணக் குகைநெறிச் சமாதி
- ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியை
- ஏழாம் தந்திரம் - 20. விந்துற்பனம்
- ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்
- ஏழாம் தந்திரம் - 22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 23. பிண்டாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 24. மனவாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 25. ஞானாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 26. சிவாதித்தன்
- ஏழாம் தந்திரம் - 27. பசு லக்கணம் - பிராணன்
- ஏழாம் தந்திரம் - 28. புருடன்
- ஏழாம் தந்திரம் - 29. சீவன்
- ஏழாம் தந்திரம் - 30. பசு
- ஏழாம் தந்திரம் - 31. போதன்
- ஏழாம் தந்திரம் - 32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை
- ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை
- ஏழாம் தந்திரம் - 34. அசற்குரு நெறி
- ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி
- ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்
- ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்
- ஏழாம் தந்திரம் - 38. இதோபதேசம்
- ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்
Paadal
-
1. திகைக்குரி யான்ஒரு தேவனை நாடும்
வகைக்குரி யான்ஒரு வாதி யிருப்பின்
பகைக்குரி யாரில்லை பார்மழை பெய்யும்
அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே.
-
10. தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி
மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப்
புலைமிசை நீங்கிய பொன்னுல காளும்
பலமிசை செய்யும் படர்சடை யோனே.
-
11. அறியாப் பருவத் தரனடி யாரைக்
குறியால் அறிந்தின்பங் கொண்ட தடிமை
குறியார் சடைமுடி கூட்டி நடப்பார்
மறியார் புனல்மூழ்க மாதவ மாமே.
-
12. அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லர்
அவன்பால் அணுகியே நாடும் அடியார்
இவன்பாற் பெருமை இலயம தாமே.
-
13. முன்னிருந் தார்முழு தெண்கணத் தேவர்கள்
எண்ணிறந் தன்பால் வருவர் இருநிலத்து
எண்ணிரு நாலு திசைஅந் தரம்ஒக்கப்
பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே.
-
14. சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம்
அவயோக மின்றி அறிவோருண் டாகும்
நவயோகம் கைகூடும் நல்லியல் காணும்
பவயோக மின்றிப் பரகதி யாமே.
-
15. மேல்உண ரான்மிகு ஞாலம் படைத்தவன்
மேல்உண ரான்மிகு ஞாலம் கடந்தவன்
மேல்உண ரார்மிகு ஞாலத் தமரர்கள்
மேல்உணர் வார்சிவன் மெய்யடி யார்களே.
-
2. கொண்ட குழியும் குலவரை யுச்சியும்
அண்டரும் அண்டத் தமரரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்திலும்
உண்டெனில் யாம்இனி உய்ந்தொழிந் தோமே.
-
3. அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசர முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப் பாதியும்
கண்ட சிவனுமென் கண்ணன்றி யில்லையே.
-
4. பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்
உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே.
-
5. இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழிச்செல்வர் வானுல காள்வர்
புயங்களும் எண்டிசை போதுபா தாளம்
மயங்காப் பகிரண்டம் மாமுடி தானே.
-
6. அகம்படி கின்றநம் ஐயனை ஓரும்
அகம்படி கண்டவர் அல்லலிற் சேரார்
அகம்படி யுட்புக் கறிகின்ற நெஞ்சம்
அகம்படி கண்டாம் அழிக்கலும் எட்டே.
-
7. கழிவும் முதலுமெங் காதற் றுணையும்
அழிவும தாய்நின்ற ஆதிப் பிரானைப்
பழியும் புகழும் படுபொருள் முற்றும்
ஒழியுமென் ஆவி உழவுகொண் டானே.
-
8. என்தாயொ டென்னப்பன் ஏழேழ் பிறவியும்
அன்றே சிவனுக் கெழுதிய ஆவணம்
ஒன்றா யுலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில்வண்ணன் நேரெழுத் தாயே.
-
9. துணிந்தார் அகம்படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பாற்பட் டொழுகும்
அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்
கணிந்தார் ஒருவர்க்குக் கைவிட லாமே.