
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை
பதிகங்கள்

துணிந்தார் அகம்படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பாற்பட் டொழுகும்
அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்
கணிந்தார் ஒருவர்க்குக் கைவிட லாமே.
English Meaning:
Devotees treasure Lord as Heart`s JewelIn the hearts of the resolute He firm abides;
In the hearts of those who adore, He in accord comports
Those who held the Primal Lord as their heart`s Jewel
And so reckoned Him
How can they part from Him, ever?
Tamil Meaning:
`சிவனே நமக்கு எல்லாப் பொருளும்` எனத் துணிந்தவரது உள்ளத்தில் ஒன்றி உறைபவனும், அங்ஙனம் துணிந்த படியே மனமொழி மெய்களால் தன்னை வழிபட்டு ஒழுகு வசத்தனாய் நின்று அருள்புரிகின்றவனும் ஆகிய, அழகிதாய் அருள் நிறைந்த திரு வுள்ளத்தினையுடைய முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானைப் பல் காலும் நினைக்கின்ற ஒருவர்க்கு அவனை விடுதல் கூடுமோ! (கூடாது)Special Remark:
`அகம் படி` என்பது `அகத்துப் பொருந்துதல்` என்னும் பொருட்டாய் அகமாகிய இடத்தைக் குறித்தது. `சிவன் தன் அடியவர் வசத்தனாய் அவர் வேண்டியவாறெல்லாம் அருளுதல் அருள் காரணமாக அன்றி வேறில்லை` என்றற்கு ``அணிந்து ஆர்அகம்படி ஆதிப்பிரான்`` என்றார். ``உறையும், ஒழுகும்`` என்னும் பெய ரெச்சங்கள், ``அணிந்தா ரகம்படி ஆதிப்பிரான்`` என்னும் தொகைச் சொல்லில், ``ஆதிப்பிரான்`` என்பதனோடு முடிந்தன. `தேனை உண்டறியாதவர் அதனை உண்டு சுவை கண்டபின் விடாமைபோலச் சிவனது அருளின்பத்தை அறியாதார் அதனை அறிந்து நுகர்ந்தபின் விடமாட்டார்` என்பார், ``கணிந்தார் ஒருவர்க்குக் கைவிட லாமே`` என்றார். `கணித்தார்` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது.``மேவினார் பிரிய மாட்டா விமலனார்``
தி.12 கண்ணப்பர்., 174
என்ற திருத்தொண்டர் புராணத்தையும் காண்க. கணித்தல், பலகால் நினைத்தல்.
இதனால், `சிவனடியார் சிவானந்தத்தைத் தெவிட்டாது நுகர்ந்து திளைப்பவர்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage