
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை
பதிகங்கள்

தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி
மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப்
புலைமிசை நீங்கிய பொன்னுல காளும்
பலமிசை செய்யும் படர்சடை யோனே.
English Meaning:
Lord lifted me to perform His Holy WorkThe Celestial Beings bore on their heads
The Nandi of the flowing matted locks;
He on earth raised me high
His holy work to perform;
Higher still will He lift me,
Like the Golden Kingdom of Purity to rule,
—He of the spreading matted locks.
Tamil Meaning:
தேவர்கள் தம் தலையால் தனது திருவடிமேல் வணங்குகின்ற, தாழ்ந்த சடையை உடைய சிவபெருமான் தனக்கு உண்மையான தொண்டினைச் சிலர் செய்ய அதற்குப் பயனாக அவரைத் தேவர்கள் தம் தலைமேல் வைத்துப் போற்றும்படி வைத்தான். அதற்குமேல் அவன் அவரை முக்குணங்களும், கன்மமும், ஆணவமும் இல்லாத ஒளிமயமான மேல் உலகத்தை ஆள்கின்ற பயனையும் கூட்டுவிப்பான்.Special Remark:
எனவே, `சிவனடியார்கள் அத்துணை உயர்ந்தவர்கள்` என்பதாம். `தலையால்` என உருபு விரித்து, ``மிை\\\\u2970?`` என்பதற்கு, `திருவடி மிை\\\\u2970?` என உரைக்க. `மிலைய, இசைய` என்னும் செயவெனெச்ச ஈறுகள் தொகுத்தலாயின. `மிலைய` எனவே, `தலைமேல்` என்பது தானே விளங்கிற்று. ``மெய்ப் பணி செய்ய`` என்பதை, ``நந்தி`` என்பதன் பின்னர்க்கூட்டி யுரைக்க. புலை - கீழ்மை. அஃது அவற்றை உடையவற்றைக் குறித்தது. `புலை நீங்கிய மிசையுலகு` என்க. ``பொன்`` என்றது ஒளியென்றவாறு. மேலே உள்ள ஒளியுலகாவது சிவனுலகு. பலம் - பயன். வேறு தொடராய் நிற்றலின் மீட்டும் ``படர்சடையோன்`` என்றார்.இதனால், `சிவனடியார்கள் தேவரால் வணங்கப்படுபவராய்ச் சிவலோகத்தை ஆளும் பெருமையுடையவர்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage