
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை
பதிகங்கள்

இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழிச்செல்வர் வானுல காள்வர்
புயங்களும் எண்டிசை போதுபா தாளம்
மயங்காப் பகிரண்டம் மாமுடி தானே.
English Meaning:
Lord`s Devotees Rule the High HeavensIn the world existent
The Lord`s devotees pursue the sure path,
They will rule in the heavens high;
They Siva become;
Whose arms stretch embracing directions eight;
In the nether world are His Feet;
In the peaks of the cosmic universe,
The Crown of His Head rises.
Tamil Meaning:
சிவனடியார்கள் பிறரைப் போலவே தாமும் மயக்க உலகத்தில் வாழ்வராயினும் அவ்வுலகம் மயக்குகின்ற மயக்கத்துட் படாது தெளிந்த உணர்வோடே வாழ்வர். உடம்பு நீங்கிய பின்னும் பிறரைப் போல மயக்க உலகங்களில் உழலாமல் சிவன் உலகத்தை அடைந்து அதன்கண் சில புவனங்கட்குத் தலைவராயும் விளங்குவர். அவையேயன்றித் தாமும் சிவனைப் போலவே எல்லா உலகங்களும் தம்முள் வியாப்பியமாய் அடங்கத் தாம் அவற்றைத் தம்முள் அடக்கி வியாபகமாயும் நிற்பர்.Special Remark:
`ஆகவே அவர்களை எளியராக எண்ணற்க` என்பதாம். ``இயங்கும்`` என்பதனை, `தாம் இயங்கும்` எனக் கொள்க. ``செல்வர்`` என்றது `வாழ்வர்` என்றபடி, ``வான்`` இங்குச் சுத்த மாயா வெளியைக் குறித்தது. அவ்வெளியே தடத்த சிவனுக்கு இடமாதல் அறிக. பின்னிரண்டடிகள், `சிவனது இயல்பாக நன்கறியப்பட்ட வற்றை இவர்களும் உடையர்` என்பதைக் குறித்தது. சிவனது இயல்பு.``பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே``
-தி.8 திருவெம்பாவை, 17
எனவும்,
``கீதம் இனிய குயிலே, கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவிற் பாதளம் ஏழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லின் சொல்லிறந்து நின்ற தொன்மை``
-தி.8 குயிற்பத்து, 1
எனவும் விளங்கிக் கிடந்தமை காண்க. போது - திருவடி மலர். ``பகிரண்டம்`` என்றது, `அண்டங்கள் அனைத்திற்கும் வெளியே உள்ள இடம்` என்றபடி. அதுவெற்ற வெளியாகலின், ``மயங்காப் பகிரண்டம்`` என்றார். மயங்குதல், பல பொருள்கள் ஒன்றோடொன்று விரவுதல்.
இதனால், சிவனடியாரை நம்மனோருள் சிலராக வைத்து எளியராக மதித்தல் குற்றமாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage