
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை
பதிகங்கள்

அறியாப் பருவத் தரனடி யாரைக்
குறியால் அறிந்தின்பங் கொண்ட தடிமை
குறியார் சடைமுடி கூட்டி நடப்பார்
மறியார் புனல்மூழ்க மாதவ மாமே.
English Meaning:
How Tapasvins LookIn the days of childhood innocence
By their insignia external
I marked out the Holy Ones;
And becoming their devotee, I rejoiced;
Their matted locks tied in signal knot,
Caring not for this world.
Tamil Meaning:
ஒன்றும் அறியாத இளமைப் பருவத்திற்றானே சிவனடியார்களை அவரது வேடத்தால் அறிந்து மகிழ்ச்சியுற்றதே சிவனுக்கு உண்மை அடிமைத் தன்மையாகும். அதன் பின் அவர்கள் செல்லும் செலவைத் தவிர்ந்த அவர்களது திருவடிகளை விளக்கிய நீரினைத் தலையில் தெளித்துக் கொள்ளுதலே அங்ஙனம் செய்வார்க்குப் பெரிய தவமாகும்.Special Remark:
இளமையிலே அடியார் பத்தி தோன்றுதல் முன்னைத் தவத்தினாலாம். காரைக்காலம்மையார் வண்டல் பயிலும் பொழுதே தொண்டர் வரின் தொழுதமையை (தி.12 காரைக்காலம்யார்., 5) நினைக. ``நடப்பார் மறிந்த புனல்`` என்றதனால், `திருவடிகளை விளக்கிய நீர்` என்பது விளங்கிற்று. மறி - மறிதல்; தவிர்தல். முதனிலைத் தொழிற் பெயர். `மறிதலில் பொருந்திய நீர்` என்க.இதனால், அடியவரை வழிபடுவாரது சிறப்புணர்த்து முகத்தால் அவரது பெருமை விளக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage