
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை
பதிகங்கள்

திகைக்குரி யான்ஒரு தேவனை நாடும்
வகைக்குரி யான்ஒரு வாதி யிருப்பின்
பகைக்குரி யாரில்லை பார்மழை பெய்யும்
அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே.
English Meaning:
That Land Prospers where Holy Men areWhere there is a holy man of divine worth
Who pursues the Lord,
—That all space embraces—
There enemies none are;
Rains in abundance fall;
Full the people`s contentment
Evil none befalls that land.
Tamil Meaning:
`இடம்` என்று சொல்லப்படுவன எவையாயினும் அவை எல்லாவற்றையும் தனது உடைமையாக உடைய ஒப்பற்ற ஒரு தனிமுதற் கடவுளை உணருமாறெல்லாம் உணர்ந்து, அவ்வுணர்வினை மயக்கத்தால் குறைத்துப் பேசுபவரது மயக்கத்தை தனது அனுபவ மொழிகளாற் போக்குகின்ற சீரடியான் ஒருவனே ஒரு நாட்டில் இருப்பினும் அந்த நாட்டின்மேல் பகைமை கொள்வார் எவரும் இலராவர். அங்குப் பருவமழை பொய்யாது பெய்யும். எந்த ஓர் இல்லத்திலும் செல்வம் குறைதலோ, அல்லது செல்வம் தீர்ந்து வறுமை உண்டாதலோ நிகழாது.Special Remark:
ஏனைத் தேவரெல்லாம் சில உலகத்தளவிலே அதிகாரம் உடையராக, ``எல்லா உலகமும் ஆனாய் நீயே`` (தி.6) என்றருளிச் செய்தபடி அனைத்துலகங்களிலும் நிறைந்து அவற்றைத் தான் விரும்பியபடி இயக்குபவன் சிவன் ஒருவனே யாகலின், அவனை, ``திகைக்குரியான் ஒரு தேவன்`` எனவும், காரண காரிய முறையில் உறுதிப்பட விளக்குதல் பற்றி ``வாதி`` எனவும் கூறினார். திகை - திசை; இடம். ஒருவாதியே` என்னும் தேற்றேகாரம் தொகுத்த லாயிற்று. ``பார்`` என்றது இங்கு விளைநிலத்தை. நாட்டினை ``உலகு`` என்றார். ``அவ்வுலகுக்கு`` என்பதை மூன்றாம் அடியின் முதலில் கூட்டியுரைக்க.இதனால், `சிவனடியார் உள்ள நாடு யாதொரு குறையும் இன்றி நலம் மிக்கதாகும்` என்பது கூறப்பட்டது.
(இதன் பின் பதிப்புக்களில் காணப்படும் ``அவ்வுலகத்தே`` என்னும் பாடல், தந்திரம 6இல், ``அருளுடைமையின் ஞானம் வருதல்`` என்னும் அதிகாரத்தில் வந்தது.)
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage