
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை
பதிகங்கள்

சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம்
அவயோக மின்றி அறிவோருண் டாகும்
நவயோகம் கைகூடும் நல்லியல் காணும்
பவயோக மின்றிப் பரகதி யாமே.
English Meaning:
Land of Siva Jnanis is BlessedWhere Siva Yoga Jnanis flourish
Misfortunes will not be;
New ways of prosperity dawn;
All things good befall;
A very heaven that land will be;
With rebirths none for its denizens.
Tamil Meaning:
இதன் பொருள் வெளிப்படை.Special Remark:
``சிவம்`` என்பதை ஞானிக்கும் கூட்டுக. யோகமாவது `ஒன்றுதல்` ஆதலால், அவயோகம், பயனில் பொருளோடு ஒன்று தலாம். அறிவோர் - ஞானிகள். `அறிவோர் வருகை உண்டாகும்` என ஒரு சொல் வருவித்துக் கொள்க. வருகை, அவதாரத்தையும் குறிக்கும். நவம் - புதுமை; அதிசயம். `அதிசயங்களை நிகழ்த்துதல் பலர்க்குக் கூடும்` என்க. காணும் - காணப்படும். பவயோகம் - பிறப்பில் சேர்தல்.இதனால் அடியாரது பெருமைகளுள் மிக்கன சில எடுத்துக் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage