ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே
    பசைந்தெழு நீசரைப் பாசத்தின் ஏகச்
    சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
    உவந்த குருபதம் உள்ளத்து வந்தே.
  • 10. மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை
    மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும்
    பால்வைத்த சென்னிப் படரொளி வானவன்
    தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே.
  • 11. கழலார் கமலத் திருவடி யென்னும்
    நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா
    அழல்சேரும் அங்கியுள் ஆழிப் பிரானும்
    குழல்சேரும் என்னுயிர்க் கூடும் குலைத்தே.
  • 12. முடிமன்ன ராய்மூ வுலகம தாள்வர்
    அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின்
    முடிமன்ன ராய்நின்ற மூவர்கள் ஈசன்
    குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே.
  • 13. வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்
    பொய்த்தே எரியும் புலன்வழி போகாமல்
    எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
    மெய்த்தேன் அறிந்தேன்அவ் வேதத்தின் அந்தமே.
  • 14. அடிசார லாம்அண்ணல் பாத மிரண்டும்
    முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
    படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக்
    குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.
  • 15. மந்திர மாவதும் மாமருந் தாவதும்
    தந்திர மாவதும் தானங்க ளாவதும்
    சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும்
    எந்தை பிரான்றன் இணையடி தானே.
  • 2. தாடந்த போதே தலைதந்த எம்மிறை
    வாடந்த ஞான வலியையும் தந்திட்டு
    வீடந்த மின்றியே ஆள்கென விட்டருட்
    பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே.
  • 3. தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு
    ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
    ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்னந்தி
    தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே.
  • 4. உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்
    திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
    கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த
    சொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே.
  • 5. குரவன் உயிர்முச் சொரூபமும் கைக்கொண்
    டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
    பெரிய பிரானடி பேர்நந்தி பேச்சற்
    றருகிட என்னைஅங் குய்யக்கொண் டானே.
  • 6. பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே
    மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்
    காச்சற்ற சோதிக் கடன்மூன்றும் கைக்கொண்டு
    வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.
  • 7. இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும்
    பதிவித்த பாதப் பராபரன் நந்தி
    கதிவைத்த வாறும்மெய் காட்டிய வாறும்
    விதிவைத்த வாறும் விளம்பஒண் ணாதே.
  • 8. திருவடி வைத்தென் சிரத்தருள் நோக்கிப்
    பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்
    குருவடி விற்கண்ட கோனைஎங் கோவைக்
    கருவடி யற்றிடக் கண்டுகொண் டேனே.
  • 9. திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
    திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
    திருவடி ஞானம் சிறைமலம் நீக்கும்
    திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.