
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு
பதிகங்கள்

திருவடி வைத்தென் சிரத்தருள் நோக்கிப்
பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்
குருவடி விற்கண்ட கோனைஎங் கோவைக்
கருவடி யற்றிடக் கண்டுகொண் டேனே.
English Meaning:
Master Nandi Ended My Birth-CycleHe placed his hallowed Feet on my head
He fixed his benign gaze on me
And he granted me the Form Mighty,
He, my Nandi Great;
I saw him, my monarch, in Guru Form,
And saw the end of all births to come.
Tamil Meaning:
எனது சென்னிமேல் தனது திருவடிகளைச்சூட்டி, அருளே எனக்கு வடிவாம்படிப்பார்த்து, அதனால், பின்பு பரம் பொருளை யான் பெறும்படி தந்தவரும், குருவடிவில் பலராலும் காணப் பட்ட ஞானத்தலைவரும், எங்கள் தலைவரும் ஆகிய நந்தி பெருமானை நான் எனது பிறவியின் வேர் அற்றொழியுமாறு அடைந்தேன்.Special Remark:
`அருள் ஆக நோக்கி` என ஆக்கம் வருவிக்க. ``பெரு வடிவு`` என்பதில் வடிவு - பொருள்;``அந்தப் - பெருவடிவை யாரறிவார் பேசு``4
என்றதும் காண்க. ``பேர் நந்தி`` என்னும் இரு பெயரொட்டு அதனை உடையானைக் குறித்தது. ``கண்ட`` என்றது ``காணப்பட்ட`` என்றவாறு. ``எம்`` என்றது, ``நந்திகள் நால்வர்`` முதலியோரை உளப்படுத்து. ``அற்றிட`` என்பது காரியப் பொருளில் வந்தது கண்டுகொள்ளுதல், உணர்ந்துகொள்ளல் அஃது அடைக்கலமாக அடைதலாகிய தன் காரியம் தோன்ற நின்றது. நான்காம் அடியைப் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல.
இதனால், தம் ஆசிரியர் தமக்குத் திருவடி சூட்டி அருள் செய்த முறையும், அதனால் விளைந்த பயனும் கூறுமுகத்தால் தம் அனுபவம் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage