
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு
பதிகங்கள்

இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே
பசைந்தெழு நீசரைப் பாசத்தின் ஏகச்
சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
உவந்த குருபதம் உள்ளத்து வந்தே.
English Meaning:
Guru Blesses With His Hand on My HeadRise in loving praise of Lord
And having risen, in piety melt for Him;
Then the divine Guru comes
—He who had scorned Pasa`s fetters—
And lays his hand on your head,
And lo! in you wells up
The rapturous Grace of His Holy Feet.
Tamil Meaning:
வினையின்வழி மனம் சென்றவாறே செல்லுதலால், உலகவர்மேற் செல்கின்ற அன்பின்வழியே மனம் நெகிழ்ந்து செல்லுகின்ற கீழோரைப் பாசத்தினின்றும் விடுபடச் செய்தற்கு ஞானகுரு வந்து அவர்களது தலையின்மேல் தனது கையை வைத்த வுடன் அவர்களது உள்ளமாகிய பொய்கையில் அவனது திருவடிகளா கிய தாமரை மலர்கள் மலர்ந்து பொருந்தி மலர்வனவாம்.Special Remark:
`ஈசரை` என்பது பாடம் ஆகாமைக்குப் பன்மை யாயதே சான்றாகும். `பாசத்தின்` என்பதும் பாடமன்று. ``ஏக`` என் பதன்பின், `செய்ய` என ஒருசொல் வருவிக்க. சிவத்தல் - தழல் போலும் ஒளியையுடையனாதல். சென்னியில் கையை வைத்தலே `பரிச தீக்கை` எனப்படுவது. அதன் இயல்பைக் கிரியை நூல்களிற் காண்க. ``உவந்த`` என்னும் அஃறிணைப் பன்மை முற்றினை இறுதி யிற் கூட்டியுரைக்க. உவத்தல் மகிழ்தல். இங்கே மலர்தலின் மேற்று. இது குறிப்புருவகம். மாணவன் ஆசிரியனது திருவடியைப் பற்றாகப் பற்றி இன்புறுதல் மெய்ஞ்ஞானத்தின் விளைவாதலும், மெய்ஞ்ஞானம் தீக்கையான் உளவாதலும் கூறியவாறு.இதனால், சிவகுரு சிவஞானத்தையும், அதுவழியாகச் சிவானந்தத்தையும் தருமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage