
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு
பதிகங்கள்

கழலார் கமலத் திருவடி யென்னும்
நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா
அழல்சேரும் அங்கியுள் ஆழிப் பிரானும்
குழல்சேரும் என்னுயிர்க் கூடும் குலைத்தே.
English Meaning:
Grace of Feet Granted Soul`s LiberationI reached the cool shelter of His triumphant lotus Feet,
That standing as a crimson pillar of flame,
Defied the grasp even of divine Vishnu
And there, the Primal One saw
The eternal denouement of the fleshy cage
That held my soul a hoary captive.
Tamil Meaning:
வெற்றியை யுடையனவும், தாமரை மலர்போல் வனவும் ஆகிய குருவின் திருவடி என்னும் நிழலை யான் அடையப் பெற்றேன். அதனால், நெடியோனாகிய மாயோனாலும் அறியப்படா தவனும், ஓங்கி வளர்கின்ற வேள்வித் தீயில் விளங்குபவனுமாகிய சிவபிரான், எனது உயிர்க் கூடாகிய உடம்பின் தன்மையையும் மாற்றி, எனது இதயத் தாமரையில் எழுந்தருளி விளங்குகின்றான்.Special Remark:
அஞ்ஞானத்தைப் போக்கும் வெற்றியைக் குறிக்க, ``கழல் ஆர்`` என்றும், ``அனைத்தெலும்புள் நெக ஆனந்தத் தேன் சொரிதலைக்3 குறிக்க, ``கமலம்`` என்றும், பிறவி வெப்பம் நீங்க அடையும் இடமாதல் தோன்ற ``நிழல்`` என்றும் கூறினார். `அறியாப் பிரான், அங்கியுட் பிரான்` எனத் தனித்தனி முடிக்க. அழல், `அழலுதல்` என முதனிலைத் தொழிற்பெயர். `அழலுதல்` என்பது முறைப்படி வளர்க்கப்பட்டு வளர்தலைக் குறித்தது. ``குழல்`` என்பது `நாளம்` என்னும் பொருட்டாய், அதன்மேல் உள்ள மலரைக்குறித்தது. `சேரும்` என்பது முற்று உடம்பின் தன்மையாவது மாயையின் காரியமாய் மயக்குதல்.இதனால், திருவடிப் பேற்றால் சீவன் முத்தநிலை வருதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage