
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு
பதிகங்கள்

மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை
மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும்
பால்வைத்த சென்னிப் படரொளி வானவன்
தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே.
English Meaning:
When True Enlightenment ComesWhen the Master blesses you not thus
With the grace of His Feet on your crown,
The Karma of yore shall distort your thoughts;
Only when the resplendent Lord of milk-white brow
Places his blessed Feet on you,
Only then are you truly instructed.
Tamil Meaning:
எம் குரவர் எம் தலைமேல் தம் திருவடியைச் சூட்டிய அந்த முறைமையைச் செய்யாவிடில் அவர் அருள்செய்த பின்பும் வினைகள் தோன்றி, முன்பு மயங்கியிருந்த உள்ளத்தை மீளவும் அப்பழக்கம் பற்றி மயக்கம் உறச்செய்யும். அதனால், பிறை முடித்த, பேரொளி வடிவினனாகிய சிவபெருமான், குருவாகி வந்து தனது திருவடியைச் சென்னி மேல் வைத்துததுபோலச் சிந்தையிலும் நீங்காது தங்குவித்தான்.Special Remark:
`சஞ்சிதம் தீக்கையாலும், பிராரத்தம் நுகர்ச்சியாலும் கெட, ஆகாமியம் ஞானத்தாலே கெட வேண்டுதலின், இவ்வாறு செய்தான்` என அருளிச்செய்தவாறு.``என்ற வினைஉடலோ டேகும்; இடை ஏறுவினை
தோன்றில் அருளே சுடும்`` 1
என்றது காண்க. இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், திருவடி சூட்டல் தரிப்பித்தல்களின் இன்றியமை யாமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage