
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம்
பதிகங்கள்

முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்
பின்னைப் பெருமலம் வந்தவா பேர்த்திட்டுத்
தன்னைத் தெரிந்து தன் பண்டைத் தலைவன்தாள்
மன்னிச் சிவமாக வாரா பிறவியே.
English Meaning:
Jiva`s Journey to Liberation is Lord`s PlayIn the Primal Play of Lord
Were Jivas created;
Enveloped in mighty Malas were they;
Discarding them,
They realized the Self,
And besought the Feet
Of their hoary Lord;
Thus, they Siva became
With birth no more to be.
Tamil Meaning:
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாய்8 உள்ள முதல்வனாகிய சிவபெருமானது விளை -யாடலால் முதற்கண் இயல்பாய் உள்ள ஒரு மலமாகிய ஆணவமும், அது பற்றிப் பின் வந்து பெருகிய மலங்களாகிய மாயை கன்மங்களும் அவை வந்தவழியே ஒருவன் போகச் செய்து, அநாதியே அடியவ னாகிய தன்னையும், தனக்கு அநாதியே தலைவனாய் உள்ள அப்பெருமானையும் உணர்ந்து, பாசங்களை விட்டு அவனது திருவடியை அடைந்து அவனே ஆயினால், பின்பு அவனுக்குப் பிறவிகள் வாரா.Special Remark:
`ஆடல்`, `ஆட்டம்` என வருதல் போல, `விளையாடல்` என்பது `விளையாட்டம்` என வந்து, அத்துச் சாரியை பெற்றது. `விளையாட்டத்தில்` என ஏழாவது விரிக்க. ஐந்தொழில் இறைவனுக்கு விளையாட்டுப் போல்வதாதல் பற்றி அவற்றை அவனது விளையாட்டம்` என்றார். `வந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``மலம்`` என்பது ``ஓர்`` என்பதனோடும் சென்று இயைந்தது. `பெருகு` என்பது கடைக்குறைந்து நின்றது. மாயையும், கன்மமும் முறையே விரிதலும், தொடர்தலும் உடைமைபற்றி, ``பெருகு மலம்`` எனப்பட்டன. மலங்கள் வந்தவாறு, உயிர்களின் அபக்குவம். `அது நீங்கினால், அது வழியாக வந்த மலங்களும் நீங்கும்` என்பார், ``வந்தவா பேர்த்திட்டு`` என்றார். `ஆறு` என்பது கடைக் குறைந்து நின்றது ``பண்டை`` என்பது, ``தன்னை`` என்பதனோடும் இயையும் `தலைவனாவான் சிவனே`` என்றற்கு, ``சிவமாக`` என்றாரேனும், `அவனாக` என்றலே கருத்து.இதனால், அறிவு உதயத்தின் பயன்கள் முறையானே தொகுத்துணர்த்தப்பட்டன
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage