
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம்
பதிகங்கள்

அங்கே அடற்பெருந் தேவரெல் லாந்தொழச்
சிங்கா தனத்தே சிவன்இருந் தான்என்று
சங்கார் வளையும் சிலம்பும் சலேல்எனப்
பொங்கார் குழலியும் போற்றிஎன் றாளே.
English Meaning:
Lord on His Celestial ThroneThere on the Throne leonine,
Adored by the mighty Celestials,
Was Siva Seated;
And the Lady of tresses exuberant,
With bangles of conch-shell
And anklets resounding
Sang ``Hail My Lord.
Tamil Meaning:
`எந்த உயிருக்கு மல பரிபாகம் வந்ததோ, அந்த உயிரின் உள்ளத்திலே சிவபெருமான், வலிமையும், பெருமையும் உடைய அனைத்துத் தேவர்களும் தொழும்படி வீற்றிருக்கின்றான்` என்பதை உணர்தலால், அருட்சத்தியாகிய தேவியும் அங்கே மகிழ்ச்சியோடு விரைவில் சென்று அப்பெருமானை வணங்குவாள்.Special Remark:
என்றது, `அவனது குறிப்பின்வழியே செயற்பட முற் படுவாள்` என்றபடி. சத்தி சத்திமான் வழிபட்டவள் ஆதலை இவ்வாறு விளக்கினார். சிவன் அங்கே என்றும் இருப்பினும் கள்வன்போல ஒளித்திருந்து, பின் வெளிப்பட்டமை பற்றிப் புதியனாகச்சென்று இருந்தது போலக் கூறினார். ``அங்கே`` எனப் பொதுப்படக் கூறியது. மெய்ந்நூல் வழக்கு. சிவபெருமானைக் கொலுவிருப்பவன் போலக் கூறியதும், அருட்சத்தியை மகிழ்பவள்போலக் கூறியதும் உயிர்கட்கு மல பரிபாகம் வருவித்தலே அவர்களது குறிக்கோள் என்பது தோன்றுதற்கு, சலேல், ஒலிக் குறிப்பு. இஃது, ஓடி வருதலைக் குறிப்பால் உணர்த்திற்று. `சலேல் எனப் புகுந்து` என ஒருசொல் வருவிக்க. கூந்தலுக்குப் பொங்குதல் கற்றையாய் அடர்தல். `பொங்குதல் நிறைந்த குழலை உடையவள்` என்க. சத்தியை வேறெடுத்துக் கூறியது, `சத்தி நிபாதம் உளதாகும்` என்பது உணர்த்தற் பொருட்டு. ஆகவே, `மலம் பரிபாகம் உற` அதனால் சத்தி நிபாதம் உண்டாகி, அறிவு உதயம் உளதாம்` என்றதாயிற்று.இதனால், அறிவுதயம் வருமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage