
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம்
பதிகங்கள்

அறிவறி வென்றங் கரற்றும் உலகம்
அறிவறி யாமையை யாரும் அறியார்
அறிவறி யாமை கடந்தறி வானால்
அறிவறி யாமை அழகிய வாறே.
English Meaning:
Dividing Line Between Knowledge and Ignorance``Jnana, Jnana,`` thus laments this world,
They know not,
Jnana of Jiva is Jnana none; out ignorance;
When Divine Jnana overlays Jiva Jnana,
They both Pure Jnana are;
Thus much is if after all,
Between Knowledge and Ignorance.
Tamil Meaning:
உலகினர், `எமக்கு அறிவு வேண்டும், அறிவு வேண்டும்` என்று கூப்பாடு போடுகின்றனர். `ஆயினும், அங்ஙனம் கூப்பாடு போட்டுப் பெற்ற அறிவு அறியாமையாய் இருத்தலை ஒருவரும் அறியார், அங்ஙனம் ஒருவராலும் அறியப்படாதிருக்கின்ற அந்த அறியாமை நீங்கி, அறிவு அறிவாகுமானால், முன்பு `அறிவு` என்று நினைக்கப்பட்டது அறியாமையாய் இருந்த அழுகு வெளிப்பட நகைப்பு உண்டாகும்.Special Remark:
`தன்னை உடையார் ஒருவருக்கும் தான் காணப் படாது, அறிவுபோலவே தோன்றுதலும், தான் நீங்கிய பின் விளங்கி நிற்கும் அறிவைக் கொண்டே தான் அனுமித்துணரப்படுதலுமே அறியாமையின் இயல்பு` என்பது உணர்த்தியவாறு. ``அறிதோறறி யாமை கண்டற்றால்`` என்னும் திருக்குறளை8 நோக்குக.``சுடரால் இருள்தேடச் சொல்லார்கள் எந்தாய்!
சுடரால் இருள்தேடச் சொன்னாய்`` *
என்றதும் இஃதே பற்றி. ``அறிவுபோல் அடரந்தெழும் அறியாமையின் வலியால்``* எனச் சிவஞான யோகிகளும் கூறினார். இத் தன்மையதான அறியாமையைச் செய்வது ஆணவ மலமே. அது பற்றி உமாபதிதேவர்.
``ஒருபொருளும் காட்டாது இருள் உருவம் காட்டும்;
இருபொருளும் காட்டாது இது``
எனவும்,
``பலரைப் புணர்ந்தும் இருட் பாவைக்குண் டென்றும்
கணவற்கும் தோன்றாத கற்பு``*
எனவும் கூறினார்.
அழகிதல்லாததை, `அழகிது` என்றது வஞ்சப் புகழ்ச்சி. ``அழகியவாறே`` என்பதன்பின் `தோன்றும்` என்பது எஞ்சி நின்றது.
இதனால், முன்மந்திரத்தில் கூறியபடி, `அறிவு அறிவாக அறிந்து அன்பு செய்ய அறிவு உதயம் ஆவதற்குத் தடையாய் உள்ளது, பெரும்பான்மையோரால் நம்ப இயலாத ஆணவ மலம்` என்பது உணர்த்தும் முகத்தால், `அது பரிபாகம் ஆதல் இன்றியமையாதது` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage