
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை
பதிகங்கள்

ஆணவ மாதிமலம் ஐந்(து) அலரோனுக்(கு)
ஆணவ மாதிநான் காம்மாற்(கு) அரனுக்கு
ஆணவ மாதிமூன்(று) ஈசர்க்(கு): இரண்டென்ப
ஆணவம் ஒன்றே சதாசிவர்க் கானதே.
English Meaning:
Number of Malas for the Five GodsFive are the Malas
For Brahma on the Lotus Bloom,
Anava (Egoity) and the rest; (Anava, Maya, Karma, Mayeyam and Tirodhayi)
Four are the Malas for Vishnu;
Anava and others (Mayeyam devoid)
Three for Rudra,
Anava and Others (Mayeyam and Tirodhayi devoid);
Two for Mahesa
Anava and Karma;
One alone for Sadasiva—Anava.
Tamil Meaning:
(பஞ்ச மலங்களும், `ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி` என்னும் முறையில் வைத்துச் சொல்லப்படும். இவற்றுள் மறைத்தல் தொழிலைச் செய்வதில் தலைமை பெற்று நிற்பது திரோதாயியே. அதனால்), பிரமன் சிவனைச் சிறிதும் உணராதவன் ஆகலின் அவனைப் பஞ்ச மலங்களையும் உடையவனாகவும், மாயோன் சிவனைச் சிறிது அறிந்தவன் ஆகலின் அவனை, திரோதாயி ஒழிந்த ஏனை நான்கு மலங்களை உடையவனாகவும், மாயோன் சிவனைச் சிறிது அறிந்தவன் ஆகலின் அவனை, திரோதாயி ஒழிந்த ஏனை நான்கு மலங்களை உடையவனாகவும், சீகண்ட ருத்திரன் பிரளயாகலன் ஆகலின் அவனைத் திரோதாயி, மாயேயம் - இவை யொழிந்த மூன்று மலங்களே உடையவனாகவும், வித்தியேசுரர் மந்திர மகேசுரர் முதலியோர் விஞ்ஞானகலர் ஆயினும் அதிகார மலம் நீங்கா மையால் ஆணவத்தோடு, கன்மமும்கூட, இரண்டு மலங்களை யுடையவர்களாகவும், அணு சதாசிவர்கள் அதிகார மலம் நீங்கினும் போக மலம் நீங்காமையால் ஆணவம் நீங்கப் பெறாது அஃது ஒன்றனையே உடையவர்களாகவும் கூறலாம்.Special Remark:
`இதனுள் குறிக்கப்பட்ட கடவுளர் யாவரும் அணு பக்கத்தவர்களே` என்பது சொல்லாமே விளங்கும். `இவர்களை இவ்வாறு பகுத்துக் கூறியதும் பொதுவகையில் இவரிடையே உள்ள தார தம்மியம் இனிது விளங்குதற் பொருட்டே` என்க. இவர்களை இங்ஙனம் பகுத்துக் காட்டியதனால், இவர்கட்கு உட்பட்டனவாகச் சொல்லப்படும் நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளுட்பட்ட ஆன்மாக் களின் பந்த வேறுபாடுகளும், அவற்றிற்கு ஏற்ப அவற்றிற்கு நிகழும் அவ்தை பேதங்கலும் ஒருவாறு உணர்ந்து கொள்ளப்படும். `அஃதே இந்த மந்திரத்திற்குப் பயன்` என்க. இரண்டாம் அடியீற்றில் குற்றிய லுகரம் கது நின்றது.இதனால், `பந்தம் முழுவதும் நீங்காது சிறிதாயினும் உடைய இயிர்கட்கு எந்த வகையிலாவது அவத்தை பேதங்கள் நிகழவே செய்யும்` - என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage