
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை
பதிகங்கள்

தத்துவ மானவை தன்வழி நின்றிடில்
ளித்தக னாகி விளங்கி யிருக்கலாம்
பொய்த்தவ மானவை போயிடும் அவ்வழி
தத்துவ மாவ(து) அகார எழுத்தே.
English Meaning:
Letter-Sound ``A`` is Primal Tattva (Truth)If Jiva can make Tattvas function his way,
He a wise one shall be;
Illumined is Knowledge Divine,
False devotion no more shall be;
The Tattva Supreme is the primal letter-sound.
Tamil Meaning:
`மெய்` என்பன யாவும் ஒருவனது அறிவினுள்ளே அடங்கித் தோன்றுமாயின் அவன் ஏனையோர் பலரினும்திறம் மிக உடையனாய் விளங்கலாம். அப்பொழுது பயனில்லாத செயல்கள் யாவும் ஒழிந்து, பயனுள்ள செயல் கைவரும். அங்ஙனம் உணரப்படும் மெய்களில் நாதம் தலையாயது.Special Remark:
மெய்ம்மையை அறியும்பொழுதே பொய்மை பொய்மை யாதல் விளங்கும் ஆதலின், `தத்துவமானவை தன்வழி நின்றிடில் பொய்த்தவமாம் அவை போயிடும்` என்றார் பயனில்லாத செயல்களை, `தவம் என்றது இழித்தற் குறிப்பு. சொல்லும் பொருளு மாகிய இருவகைப் பொருள்களில் சொல்லைத் தனது அறிவினின்றும் வேறு பிரித்துக் காணுதல் அரிதாதல் பற்றி `தத்துவமானது அதுவே` என்றார். தன்னைக்கண்டால் போக்கொடு வர இறப்பும் விகாரமும் புருடன் இன்றாம்` என்பது சிவஞானசித்தி.l நாதத்தை அகாரமாகக் கூறுதல் மரபு.இதனால், தத்துவ ஞானமே பந்தம் நீங்குதற்கு வழியாதல் கூறப்பட்டது. `ஐந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு` என்றார் திருவள்ளுவரும்.*
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage