
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை
பதிகங்கள்

பத்தொடு பத்தும் ஓர் மூன்றும் பகுதியும்
உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்
மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும்
தத்துவம் நாலேழ் எனஉன்னத் தக்கதே.
English Meaning:
Tattvas Are Reckoned As Twenty-Eight In Yet Another WayThe sense organs ten and ten,
The intellectual organs one and three,
The Turiya State,
Time subjectively cognised,
The undifferentiated Void
And the Turiyatita above
—Thus it is as eight and twenty, too
The Tattvas reckoned are.
Tamil Meaning:
(`வேதாந்திகள் கொள்வன` - என மேற்கூறப்பட்ட) தத்துவங்கள் இருபத்தெட்டு என்னும் தொகை, தூலபூதம் ஐந்து, சூக்கும பூதம் (தன்மாத்திரை) ஐந்து, ஆகிய பூதங்கள் பத்தும், ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து ஆகிய இந்திரியங்கள் பத்தும், `மனம், அகங்காரம், புத்தி` - என்னும் அந்தக் கரணங்கள் மூன்றும், மூலப்பகுதி ஒன்றும் ஆகிய சடங்கள் இருபத்து நான்கும், அவற்றிற்கு மேல் அபர துரியமாகிய புருடன், அல்லது சீவன் ஒன்றும், அதற்குமேல் காலத்தின் வாயிலாக எல்லாவற்றையும் இயக்குகின்ற ஈசுரன் ஒருவனும், அவனுக்கு மேலேயுள்ள மாயையாகிய பராகாசமும், அவனுக்கு மேல் பரதுரியமாகிய பரம்பொருள் ஒன்றும் எனக் கருதத் தக்கதாகும்.Special Remark:
சித்தம் மூலப்பகுதியுள் அடங்கிற்று. `பராகாயம்` என்பதற்கு `மேய்த்த வியோமம் என்றார். ஈசுரனை மாயைக்கு உட்பட்டவனாகவே வேதாந்திகள் கொள்வர்.இதனால் மேல் எண்ணளவாகக் கூறிய வேதாந்தி தத்துவங்கள் இவை என்பது விளக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage