
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை
பதிகங்கள்

மேவிய அந்தன் விழிகட் குருடனாம்
ஆவயின் முன்அடிக் காணும் அதுகண்டு
மேவும் தடிகொண்டு சொல்லும் விழிபெற
மூவயின் ஆன்மா முயலுங் கருமமே.
English Meaning:
Jivas Grope Their Way Back to Sakala Jagrat StateThe blind one,
Eyes he has; but vision none;
And so gropes for the steps,
He made of yore;
Having found them,
He seizes a stick
And with its aid
Finds the Way;
Even like it
Do the Jivas with avastas three
Seek to march back their way.
Tamil Meaning:
பிறவிக் குருடன் கண்ணை விழித்து விழித்துப் பார்ப்பினும் யாதொன்றையும் காணமாட்டுவானல்லன். (இது போன்றது சாக்கிர துரியாதீதநிலை அஃதாவது, உணர்வு சிறிதும் இன்றிக் கிடக்கும் நிலையாம்).ஒன்றும் காணப்படாத நிலையில் அக்குருடன் தன் காலில் கீழ்க் கிடப்பதைத் தடவித் தடவிப்பார்ப்பான். (இதுபோன்றது சாக்கிர துரிய நிலை. அஃதாவது, உணரத் தக்கனவற்றைச் சிறப்பாக அன்றிப் பொதுவாக உணரும் நிலையாம்).
தடவிப் பார்த்த குருடனுக்குக் கோல் ஒன்று கிடைத்ததாயின் அதனைத் துணையாகப் பற்றிச் சில இடங்களுக்குச் செல்வான். (இது போன்றது சாக்கிரச் சுழுத்தி நிலை; உணரப்படும் பொருள்களைச் சிந்தனையால் உணரும் நிலையாம்).
இதன் பிறகு அக்குருடன்தனக்குக் கண் தெரிவதற்கு வேண்டியவற்றைச் செய்வாரை அணுகி அவர்கட்கு உபசார வார்த் தைகளைச் சொல்வான். (இதுபோன்றது சாக்கிரச் சொப்பனநிலை. உணரவேண்டுவனவற்றை உணர்தற்கு முனையும் நிலையாகும்).
(இறுதியில் குருடன் கண்பெறுதலும் உண்டு. அதுபோன்றதே சாக்கிர சாக்கிரம்) சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி என்னும் மூன்று நிலைகளில்தான் ஆன்மா செயற்பாடுடையதாம். ஏனை இரண்டும் செயலற்ற நிலைகளாம்).
Special Remark:
மேவிய-பிறப்பிலே பொருந்திய. விழி கண், நிகழ் கால வினைத்தொகை. `குருடன்` என்றது, `பார்க்க இயலாதவன்` என்ற தாம். `காணும்` என்றது, தடவிப் பார்த்தலை, `தடிகொண்டு மேவும்` எனவும் `விழிபெற ஆவன கொல்லும்` எனவும் மாற்றியுரைக்க.இங்குக் கூறிய இவ்வியல்புகள் பெரிதும் அதிர்ச்சியைத் தரத் தக்க செய்தியை அறிந்தவுடன் ஆன்மா மூர்ச்சித்துப் பின் தெளிவடை தலில் நன்கு விளங்கம். அது பற்றி அவற்றையே சிலர் உதாரணமாகக் காட்டினாலும் அவை மட்டுமே உதாரணங்கள் அல்ல. மிகச் சிறு சிறு செய்திகளிலும் விழிப்பில் இவைகள் இடையறாது நிகழ்வனவேயாம்.
இதன் முதல் மூன்று அடிகள் ஒட்டணியாய் அமைந்தன. ஆதலின், இதனால், மேற்கூறியவை உவமைகாட்டித் தெளிவிக்கப் பட்டனவாம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage