
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை
பதிகங்கள்

வைச்சன அச்சு வகையிரு பத்தஞ்சோ(டு)
உச்ச முடன் அணை வான்ஒரு வன்னுளன்
பிச்சன் பெரியன் பிறப்பிலி என்றென்று
நச்சி அவனருள் நான்உய்ந்த வாறே.
English Meaning:
God Placed the Twenty-Five Tattvas for JivaOne there is,
Who placed Tattvas five and twenty,
With them in my body I abide;
``Mad is He, Great is He, Birthless is He``
—Thus in endearment I sought Him;
And by the Grace He granted
Redeemed am I.
Tamil Meaning:
உயிர்களுக்கு உதவியாக அவைகளின் வசமாக வைக்கப்பட்ட கருவிகள் இருபத்தஞ்சு. எனினும், (அவைகளை வைத்துமட்டும் போதாமையால்) எல்லாவற்றையும் நடத்தும் தலைமைப்பாட்டோடு உடனாய், நீங்காது ஒருவன் இருக்கின்றான். அவனை எல்லா நூல்களும் ஒருமுகமாக, `பித்தன்` என்றும் `பெரியோன்` என்றும் `பிறப்பிலி` என்றும் கூறுதலையறிந்து. அவனையே விரும்பி நான் உய்ந்தவாறு குறிக்கொளத்தக்கதாகும்.Special Remark:
இருபத்தஞ்சு கருவிகளாவன, ஆன்மதத்துவம் இருபத்து நான்கும், புருட தத்துவம் ஒன்றுமாம். வித்தியா தத்துவங்கள் அனைத்தும் `புருடன்` என ஒன்றாக அடக்கப்பட்டன. ஆன்மாக் களுடன் இறைவன் கருவிகளைக் கூட்டினால் மட்டும் போதாது. செயல்தோறும் அவனும் உடன் இயங்கினால்தான் உயிர்கள் அக் கருவிகளால் அடையத் தக்க பயனை அடையும். அதுபற்றி இறைவன் அவ்வாறு உடன் நிற்றலையே இம்மந்திரத்தால் குறித்தார்.இறைவன் இவ்வாறு உடனாய் நிற்கும் நிலைபெத்த காலத்தில் மத்தியாலவத்தையிலே சிறப்பாக நிகழ்தலால், அவ்வவத்தை `உணர்த்து முறைமை` - எனப்படுகின்றது. ஆகவே அதனை இங்குக் குறித்தல் முறைமையாகின்றது. ஈற்றில் உரைக்கப்பட்டது சொல்லெச்சம்.
இறைவன் இங்ஙனம் உடனாய் நிற்கும் நிலை சிவஞான போதம் பதினொன்றாம் சூத்திரத்தில் `காணும் உபகாரம்` என இனிது விளக்கப்பட்டது.
`இங்ஙனம் உடனாய் நிற்பவனைப் பிற தேவராக உணராது, சிவபெருமானாகவே உணர்தல் வேண்டும்` என்பதையே பின்னிரண் டடிகளால் கூறினார். `பிச்சன், பிறப்பிலி, பேர் நந்தி` என அப்பரும் அருளிச் செய்தார்.l `அவனருள் நச்சி` என மாற்றி யுரைக்க.
`இருபத்தஞ்சு` - என்றதை மாகேசுர மூர்த்தமாகக் கொள் ளுதற்கு, இங்கு யாதோர் இயைபும் இல்லாமை யறிக.
இதனால், மத்தியாலவத்தை பற்றி அறியத்தக்கதொரு சிறப்புப் பொருள் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage