
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்
பதிகங்கள்

மறையோ ரவரே மறையவ ரானால்
மறையோர்தம் வேதாந்த வாய்மையில் தூய்மை
குறையோர்தல் மற்றுள்ள கோலா கலமென்
றறிவார் மறைதெரிந் தந்தண ராமே.
English Meaning:
Only those who chant the Vedas are true Brahmins.It is only the Vedanta preached by true Brahmins that is lofty.
If other texts which are defective are read it is only for show,
The true Brahmins realize this.
Tamil Meaning:
அந்தணர் என்று சொல்லப்படுவோர் அந்தணரேயாதல் உண்மையாயின், `அந்தணர்க்குரிய வேத முடிவின் மெய்ப்பொருளால் அடையும் தூய்மையாவது, உயிர்களின் குறை பாட்டினை உணர்தலே` என்றும், ``நூலும் சிகையும் முதலிய பிற வெல்லாம் வெளிப்பகட்டாகிய ஆரவாரங்களே` என்றும் அறிவார். அவ்வாறு அறிந்தவரே வேதம் உணர்ந்த அந்தணராவர்.Special Remark:
`தெரிந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `அவரே அந்தணராம்` என வேறு தொடராக்கி உரைக்க.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage