
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்
பதிகங்கள்

பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான திருக்கை யிருத்திச்
சொருபம தானோர் துகளில்பார்ப் பாரே.
English Meaning:
Deep they pondered on Pranava`s great holy way,By Guru`s grace inspired, they recited the mystic lay,
The rituals performed by the four Vedas prescribed,
And thus attained pure, pristine Manifestation–the spotless Brahmins they.
Tamil Meaning:
பலநெறிகளையும் அடக்கிநிற்கும் பெருநெறியை உணர்த்தும் பிரணவ மந்திரத்தின் பொருளைச் சிந்தித்து, அருள் ஆசிரியர்தம் அருளுரையால், முடிந்த பொருளை உணர்ந்து, நான் காகிய வேதத்திற் சொல்லப்பட்ட முத்திநெறியாகிய திருவருட்குத் தம்மைக் கொடுத்து, அத்திருவருட்கு முதலாகிய சிவத்தின் உண்மை நிலையைத் தலைப்பட்டவரே குற்றம் அற்ற அந்தணராவர்.Special Remark:
மந்திரங்கள் அனைத்திற்கும் முதலாவது ஓங்கார மாதலின், அதனை அனைத்து நெறிகட்கும் இடம் என்றார். ``உரை`` என்றது விடாத ஆகுபெயராய், அதனால் உணர்த்தப்படும் முடிந்த பொருளைக் குறித்தது. `வேதத்திற்குப் புறம்பான நெறிகளின் முத்தி உண்மை முத்தியாகாது போலியாய்ப்போம்` என்றற்குத் `திருநெறி` என வாளா கூறியொழியாது, ``வேதத் திருநெறி`` என விதந் தோதினார். பின் வந்த திரு, செல்வம்; அது `சென்றடையாத` (தி.1 ப.98 பா.1) (தி.6 ப.87 பா.1) இறைவன் செல்வமாகிய திருவருளையே குறித்தது. திருவருளின் வசமாய் நிற்றலை, `அதன் கையில் இருத்தி` என்றார்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage