
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்
பதிகங்கள்

திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்
குருநெறி யாலே குருபதஞ் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணுந்
துரிய சமாதியாந் தூய்மறை யோர்க்கே.
English Meaning:
The Holy Path neither Chit nor Achit is;Along the Guru-led way, they reach the blessed Holy State;
And all action and rituals abandoning,
The pure Brahmins glide into Turiya Samadhi State.
Tamil Meaning:
``சத்தியமும் தவம்`` (தி.10 பா.227) என்னும் திருமந்திரத்துட் கூறப்பட்ட முறைமையில் நிற்கும் உண்மை அந்தணர்கட்கே சித்தாகிய தம்மையும், அசித்தாகிய பாசங்களையும் பொருளென உணரும் தன்மை நீங்கி, ``வேதத் திருநெறி`` (தி.10 பா.226) என மேற்கூறிய உபதேச பரம்பரை முறையிலே ஞானகுருவைத் தலைப்பட்டு, நாட்கடன் நோன்பு முதலியவை `உறங்கினோன்கை வெறும்பாக்கென்னத் தானே தவிர` (சங்கற்ப நிராகரணம் - 4. 234) ஞேயம் ஒன்றையே கண்டிருக்கின்ற துரியாதீத நிலை கை கூடுவதாகும்.Special Remark:
``சித்த சித்தின்றி`` என்பதை முதலிற் கூட்டி, ``தூய்மறையோர்க்கே ஆம்` என மாற்றி உரைக்க. ``இன்றி`` என்பது `நீங்கி` என்றவாறு. காண்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது. சமாதி, `அதீதம்` என்னும் பொருளது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage