
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்
பதிகங்கள்

வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தங் கேட்டவர் வேட்கைவிட் டாரே.
English Meaning:
The Brahmins who yearned for Vedanta`s mystic truths,Heard and listened they yielded still to desire`s sway;
True Vedanta it is when earth-born desires all are crushed;
Those who Vedanta truly grasped, all desires burnt away.
Tamil Meaning:
வேதத்தின் முடிந்த பொருள் ஆசையற்ற நிலையே யாம். அதனால், அப்பொருளை உணர்ந்தவர் ஆசையற்று நின்றார்கள். ஆயினும் சிலர் அப்பொருளை உணர விரும்பி உணர்த்து வாரை அடைந்து உணர்ந்தும், தம் ஆசையை விட்டாரில்லை.Special Remark:
`அங்ஙனம் ஆசையறாது நின்று ஒதல் முதலிய அறு தொழில்களைப் பொருளாசை முதலியவற்றாற் செய்வோர் அந்தண ராகார்` என்பதாம். பின்னிரண்டடிகளை முதலில் வைத்து உரைக்க. `ஒழிந்த` என்பதன் இறுதி நிலை தொகுத்தலாயிற்று. நிலையை, ``இடம்`` என்றார்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage