
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்
பதிகங்கள்

சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன்உண்மை யுமின்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர் தாம்அன்றே.
English Meaning:
Of Truth devoid, of pure Wisdom bereft,Lacking sense-control, spiritually inert,
Empty of devotion or grasp of Truth divine;
Mad fools are they–not Brahmins, I assert.
Tamil Meaning:
மேல் (தி.10 பா.225) சத்தியமும் தவமும் முதலாகக் கூறப்பட்ட ஒழுக்கமும், சிவபத்தியும், சிவஞானமும் இன்றி, வயிறு வளர்த்தலில் விருப்பம் மிக்க அறிவிலிகள் ஒருபோதும் பிராமணராதல் இல்லை.Special Remark:
என்றது, உடல் ஓம்புதல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டமை காரணமாக, `பிராமணர் முதலிய வருண வேறுபாடு ஒழுக்கத்தாலன்றிப் பிறப்பிலே அமைந்தன` எனப் பிதற்றுவாரை வன்மையாக மறுத்தவாறு. விடயம் - ஐம்புலன். ஓர்தல், மெய்ப் பொருளை; அது, கற்றும் கேட்டும் ஓர்ந்துணரப்படுவதாம். ``உணர்வு`` என்று அந்த அபர ஞானத்தை. பரன் உண்மை - முதற்பொருளின் சொரூபம். இவ்விடத்து, `உணர்தல்` என்பது சொல்லெச்சமாய் நின்றது. பித்து, பேராசை. அதன்கண் பின்னும் உறைத்து நிற்றலின், `ஏறும்` என்றும், கிடைத்தற்கரிய பிறவியைப் பிழைபடும் நெறியிற் போக்கலால் ``மூடர்`` என்றும் கூறினார்.இவை மூன்று திருமந்திரங்களாலும் அந்தணர் ஒழுக்கத்தது சிறப்பு எதிர்மறை முகத்தால் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage