
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- மூன்றாம் தந்திரம் - 1. அட்டாங்க யோகம்
- மூன்றாம் தந்திரம் - 2. இயமம்
- மூன்றாம் தந்திரம் - 3. நியமம்
- மூன்றாம் தந்திரம் - 4. ஆதனம்
- மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்
- மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்
- மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம்
- மூன்றாம் தந்திரம் - 7. தாரணை
- மூன்றாம் தந்திரம் - 8. தியானம்
- மூன்றாம் தந்திரம் - 9. சமாதி
- மூன்றாம் தந்திரம் - 10. அட்டாங்க யோகப் பேறு
- மூன்றாம் தந்திரம் - 11. அட்டமா சித்தி
- மூன்றாம் தந்திரம் - 12. கலைநிலை
- மூன்றாம் தந்திரம் - 13. காரியசித்தி
- மூன்றாம் தந்திரம் - 13. காய சித்தி உபாயம்
- மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்
- மூன்றாம் தந்திரம் - 15. ஆயுள் பரீட்சை
- மூன்றாம் தந்திரம் - 16. வார சரம்
- மூன்றாம் தந்திரம் - 17. வார சூலம்
- மூன்றாம் தந்திரம் - 18. கேசரி யோகம்
- மூன்றாம் தந்திரம் - 19. பரியங்க யோகம்
- மூன்றாம் தந்திரம் - 20. அமுரி தாரணை
- மூன்றாம் தந்திரம் - 21. சந்திரயோகம்
Paadal
-
1. ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே.
-
10. வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்
டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.
-
11. இட்டதவ் வீடிள காதே யிரேசித்துப்
புட்டி படத்தச நாடியும் பூரித்துக்
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
நட்டங் கிருக்க நமனில்லை தானே.
-
12. புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.
-
13. கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிற்கோலம் அஞ்செழுத் தாமே.
-
14. பன்னிரண் டானை பகல்இர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண்டா னைக்குப் பகல்இர வில்லையே.
-
2. ஆரியன் அல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.
-
3. புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்;
கள்ளுண்ண வேண்டா; தானே களிதரும்;
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.
-
4. பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்
பிராணன் இருக்கிற் பிறப்பிறப் பில்லை
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராணன் அடைபேறு பெற்றுண் டிரீரே.
-
5. ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பகம் அறுபத்து நால்அதில்
ஊறுதல் முப்பத் திரண்ட திரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.
-
6. வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியனும் வெட்ட வெளியனு மாமே.
-
7. எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை
அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனு மாமே.
-
8. ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.
-
9. மேல்கீழ் நடுப்பக்கம் மிக்குறப் பூரித்துப்
பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து
மாலாகி உந்தியுட் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே.