ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. தவம்வேண்டும் ஞானந் தலைப்பட வேண்டில்
    தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில்
    தவம்வேண்டா அச்சக சன்மார்க்கத் தோர்க்குத்
    தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே.
  • 10. படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்
    கிடரடை யாவண்ணம் ஈசன் அருளும்
    விடரடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில்
    உடரடை செய்வதோ ருன்மத்த மாமே.
  • 11. ஆற்றில் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்
    ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட வாறொக்கும்
    நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்
    சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.
  • 12. பழுக்கின்ற வாறும் பழம்உண்ணு மாறும்
    குழக்கன்று துள்ளிஅக் கோணியில் புல்காக்
    குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள்
    இழுக்காது நெஞ்சத் திடஒன்று மாமே.
  • 13. சித்தம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
    சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால்
    சித்தஞ் சிவமாக வேசித்தி முத்திஆம்
    சித்தம் சிவமாதல் செய்தவப் பேறே.
  • 2. ஓதலும் வேண்டா உயிர்க்கு யிருள்ளுற்றால்
    காதலும் வேண்டாமெய்க் காயம் இடங்கண்டால்
    சாதலும் வேண்டா சமாதிகை கூடினால்
    போதலும் வேண்டா புலன்வழி போதார்க்கே.
  • 3. கத்தவும் வேண்டா கருத்தறிந் தாறினால்
    சத்தமும் வேண்டா சமாதிகை கூடினால்
    சுத்தமும் வேண்டா துடக்கற்று நிற்றலால்
    சித்தமும் வேண்டா செயலற் றிருக்கிலே.
  • 4. விளைவறி வார்பண்டை மெய்த்தவம் செய்வார்
    விளைவறி வார்பண்டை மெய்உரை செய்வார்
    விளைவறி வார்பண்டை மெய்யறம் செய்வார்
    விளைவறி வார்விண் ணின்மிக் காரே.
  • 5. கூடித் தவம்செய்து கண்டேன் குரைகழல்
    தேடித் தவம்செய்து கண்டேன் சிவகதி
    வாடித் தவம்செய்வ தேதம் இவைகளைந்(து)
    ஊடிற் பலஉல கோர்எத் தவரே.
  • 6. மனத்துரை மாகடல் ஏழுங்கை நீந்தித்
    தவத்திடை யாளர்தம் சார்வத்து வந்தார்
    பவத்திடை யாளர் அவர்பணி கேட்கின்
    முகத்திடை நந்தியை முந்தலு மாமே.
  • 7. மனத்திடை நின்ற மதிவாள் உருவி
    இனத்திடை நீக்கி இரண்டற வீர்ந்து
    புனத்திடை அஞ்சும்போ காமல் மறித்தால்
    தவத்திடை ஆறொளி தன்ணொளி யாமே.
  • 8. ஒத்து மிகவும்நின் றானை யுரைப்பது
    பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ
    முத்தி கொடுக்கும் முனிவ ரெனும்பதம்
    சத்தான செய்வது தான்தவந் தானே.
  • 9. இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக்கென் றெண்ணி
    மலர்தொட்டுக் கொண்டேன் வரும்பலன்காணேன்
    தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளம்
    தலைதொட்டுக் கண்டேன் தவங்கண்ட வாறே.