
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம்
பதிகங்கள்

சித்தம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால்
சித்தஞ் சிவமாக வேசித்தி முத்திஆம்
சித்தம் சிவமாதல் செய்தவப் பேறே.
English Meaning:
Tapas is Thought Becoming SivaIf your thoughts be all of Siva
You need no more penance perform;
If your thoughts find a kin
With those that have Siva Bliss tasted,
Then shall you be one with Siva;
Then is truly Siddhi and Mukti;
But your thoughts shall be of all Siva
Only by tapas intense.
Tamil Meaning:
ஒருவர்க்கு அவரது உள்ளம் சிவமேயானபொழுது அவருக்குச் செய்யக் கடவ தவம் யாதும் இல்லையாம். அவரைப் போல உள்ளம் சிவமாய்ச் சிவானந்தத்திலே திளைத்திருக்கப் பெற்றோரது உறவே அவருக்கு உண்டாகும்; பிறரது உறவுகள் யாவும் அற்றொழியும். சித்தியும், வீடுபேறும் அவர்க்கு எளிதின் உளவாம். ஆகையால், உள்ளம் சிவமாதல் ஒன்றே உண்மைத் தவத்தால் பெறும் பயனாகும்.Special Remark:
\\\"ஆக\\\" என்னும் செயவெனெச்சம், `உண்ணப் பசி தீரும்\\\' என்பதுபோலக் காரணப் பொருளில் வந்தது. எனவே, அஃது எதிர்காலத்தில் இறந்த காலமாம். `அவர்க்கு உண்டாம்\\\' எனக் கோடற் பொருள் வருவிக்க. \\\"உறவாவார் உருத்திரபல் கணத்தினோர்கள்\\\' 3 என்று அருளிச் செய்ததும் காண்க. \\\"சித்தி முத்தி\\\", உம்மைத் தொகை. மூன்றாம் அடியின் இறுதியில், `ஆகலான்\\\' என்பது எஞ்சி நின்றது. ஈற்றில் நின்ற பிரிநிலை ஏகாரத்தை \\\"சிவமாதல்\\\" என்பதனோடு கூட்டியுரைக்க. அங்ஙனம் உரைக்கவே `அப்பயனைத் தாராத பிற தவங்கள் தவமல்ல\\\' என்பது போந்து, அதிகாரப் பொருளை உணர்த்துவதாம்.இதனால், `சித்தத்தைச் சிவமாகச் செய்யம் பெருந் தவம் அல்லாத சிறு தவங்கள் தவமாகா\\\' என அவற்றது இகழ்ச்சி கூறப்பட்டது. இதனானே சித்தத்தைச் சிவமாகச் செய்வனயாவும் தவமாம் என்பதும் பெறப்படும்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage