
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம்
பதிகங்கள்

மனத்திடை நின்ற மதிவாள் உருவி
இனத்திடை நீக்கி இரண்டற வீர்ந்து
புனத்திடை அஞ்சும்போ காமல் மறித்தால்
தவத்திடை ஆறொளி தன்ணொளி யாமே.
English Meaning:
Follow Tapasvins and Meet GodSwimming across the seven seas of the mind
The tapasvins true their heaven reached;
Let them that are tossed in the sea of births about
Listen but to their Commandments holy,
Then can they see Nandi, face to face for sure.
Tamil Meaning:
உள்ளமாகிய உறையிலே உள்ள ஞானமாகிய வாளை உருவி ஐம்பொறிகளாகிய பசுக்களைப் பிணித்துள்ள ஆசை யாகிய கயிற்றை இரண்டு துண்டாய் அறும்படி அறுத்து அவைகளை ஏனைப் பசுக் கூட்டத்தினின்றும் நீக்கி, அப்பசுக்களோடு தாமும் கொல்லையிற் சென்று மேயாதபடி அவற்றை மடக்கி வைத்தல் ஒருவனுக்கு கூடுமாயின், தவத்தில் தோன்றுவனவாகிய ஆறு ஒளிகளும் அவனுக்கு உரிய ஒளிகளாகிப் பயன் தரும்.Special Remark:
`அது கூடாதபொழுது அவனது தவம் ஒளியில்லாது, இருளேயாம்` என்றபடி, ``மதிவாள்``, ஏகதேச உருவகம். ``புனத் திடைப் போகாமல்`` என்றதனால், ``அஞ்சு`` எனப்பட்டவை `பசு` என்பது விளங்கிற்று.`பார்ப்பா னகத்திலே பாற்பசு ஐத்துண்டு``l என ஐம்பொறிகளைப் பசுக் களாகப் பின்னும் கூறுதல் காண்க. ஆறு ஒளி - ஆறு ஆதாரங்களில் தோன்று இறையொளி. `ஐம்புல ஆசையை அறுத்தவர்க்கே யோகமும் தவமாய்ப் பயன்படும்` என்பது உணர்த்தி, `அது செய்யாதாரது யோகம் தவமன்றாம்` என இகழ்ந்தவாறு.
இதனால், `மேற்கூறிய எழுகடல் போலும் ஆசை ஐம்பொறி களின்வழிப் பெருகித் துன்புறுத்துமாகலின், அவற்றை அடக்காதாரது தவம் தவமன்றாம்` என அதன் இகழ்ச்சி கூறப்பட்டது. இதன் பின்னிரண்டடிகள்,
``நினைத்த இடத்தே நிலைபெறுமாகில்
அனைத்துயிர்க் கெல்லாம் அதிபதி யாமே``
என்பது பாடமாகவும் காணப்படுகின்றது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage