
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம்
பதிகங்கள்

விளைவறி வார்பண்டை மெய்த்தவம் செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்உரை செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யறம் செய்வார்
விளைவறி வார்விண் ணின்மிக் காரே.
English Meaning:
Fruit of TapasThey who perform tapas true
Shall know the fruit thereof
They who speak truth pure
Shall know its fruit thereof
They who stand in righteous way
Shall enjoy the fruit thereof
They who are great on earth
Shall reap heaven`s fruit.
Tamil Meaning:
தொன்று தொட்டு அடிபட்டு வரும் தவம் வாய்மை, அறம் என்பவற்றைச் செய்வார் யாவரும், `அவற்றால் விளையும் பயன் இவை` என உணர்ந்தே செய்வர். அங்ஙனம் அறிந்து அவற்றைக் கடை போகச் செய்து அப்பயனைப் பெற்றவர்கள் விண், மண் என்னும் இரண்டுலகத்து உள்ளாரினும் மேம்பட்டவராவர்.Special Remark:
மெய்த்தவம் - நிட்காமியத்தவம் எனவும், மெய்யறம் - புகழ், கைம்மாறு முதலியவற்றை நோக்காது அன்பும், அருளும் பற்றியே செய்யப்படுவது எனவும் அறிக. `விளைவறிந்தே செய்வார், விளைவுபெற்று உய்வார்` என்றதனால்` அவ்விளைவை அறிந்து செய்து பெறமாட்டாதாரது சாதனங்கள் தவம் முதலியன ஆகாவாயின.இதனால், சாத்தியத்தைத் தருவனவே சாதனங்களாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage