
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் 14. பொற்றில்லைக் கூத்து
பதிகங்கள்

ஆடிய காலும் அதிற்சிலம் போசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
தேடிஉள் ளேகண்டு தீர்ந்தற்ற வாறே.
English Meaning:
Varied DancesAnd the dances varied,
With it the foot-work
And the jingle of the anklets
And the songs sungv
And the Forms He assumed,
—So, the Guru Para dances;
Seek that dance within
And your birth`s cycle forever end.
Tamil Meaning:
ஞான குருவாய் நின்று ஞானத்தைத் தருகின்ற சிவன், அவ்வாறன்றி, ஊன்றியும் தூக்கியும் ஆடும் கால்களும் அவற்றில் கழலும் சிலமும் ஆகியவற்றின் ஓசைகளும், அருகில் உள்ளவர்கள் பாடுகின்ற பாட்டுக்களும், பலவகையான கரணங்களும் கூடிய கூத்துக் கோலத்தைக் கொண்டு ஆடுதலை அறியாமல், அவனை எங்கெங்கோ தேடியலைந்து, பின்பு என் உள்ளத்திலே அந்தக் கூத்துக் கோலத்தைக் கண்டேன். அக் காட்சியே யான் பிறவிக் கடலினின்றும் நீங்கிக் கரையேறிய நெறியாகும்.Special Remark:
``குரு பரன்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. `குருபரனாய் வந்து செய்கின்ற அருளையே கூத்தனாய் நின்று செய் கின்றான்` என்பது இம்மந்திரத்தின் திரண்ட கருத்து. கூத்தனாய் என ஒரு சொல்லாற் சொல்லியொழியாது, அக்கோலத்தை வகுத்துக் கூறினார், அதனை உள்ளத்தே கண்டவாறெல்லாம் இனிது விளங்குதற்கு. கண்டது, `உள்ளே` என்றதனால், தேடியது `வேளியே` என்பது போந்தது. `பிறவி யறுதலை எண்ணாதவர் திருக்கூத்தினைப் புறத்தே மட்டும் ஒருகாற் கண்டு ஒழிவர்` என்பதும், `பிறவியற வேண்டுபவர் அதனை எஞ் -ஞான்றும் உள்ளத்தே கண்டு கொண்டிருப்பர்` என்பதும் கூறியவாறு. கண்டமைக்கும், அற்றமைக்கும் `யான்` என்னும் எழுவாயும், `அற்றவாறு அறியத்தக்கது` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. கூத்தப் பிரான் ஒருகாலிற் சிலம்பும், ஒரு காலிற் கழலும் அணிந்திருத்தல் அவற்றுள் ஒன்றைக் கூறவே மற்றொன்றும் பெறப்பட்டது.இதனால், `கூத்துக்கோலம், போகியர்க்கு போகவடிவாதலே யன்றி, யோகியர்க்கு யோக வடிவுமாம்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage