
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் 14. பொற்றில்லைக் கூத்து
பதிகங்கள்

குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம்
சிரானந்தம் பூரித்துத் தென்றிசை சேர்ந்து
புரானந்த போகனாய்ப் பூவையும் தானும்
நிரானந்த மாக நிருத்தஞ்செய் தானே.
English Meaning:
Dance in the SouthIn the Centre the Guru indicated,
Within the head, He as Bliss danced;
Then moving South
In renewed ecstasy espousing Sakti,
He with Her in Eternal Bliss danced.
Tamil Meaning:
குரு உணர்த்தியருள்கின்ற இன்பக் கதிராய்ப் பின் பெருகி விளைகின்ற தலையாய இன்பத்தைத் தன்னுள் நிரம்பக் கொண்டு சிவன் தென்னாட்டில் தில்லையை அடைந்து மங்கையோடு உடனாம் இன்பப் போக வடிவினனாய், நிலையான இன்பத்தைத் தரும் நடனத்தைச் செய்கின்றான்.Special Remark:
`அதனைத் தவறாது சென்று கண்டு தொழுதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம்.குரு + ஆனந்தம் = குரானந்தம். `ரேகை`, ஒளியின் சிறு கூறு. குரு உபதேசத்தில் சிவானந்தம் கேள்வியளவில் சிறிதே புலப் படுதலால் அதனை ``ரேகை`` என்றும், பின்னர்ச் சிந்தித்தல், தெளிதலால் பெருகி வருதலால் ``கூர்ந்த`` என்றும், அங்ஙனம் பெருகி எல்லையின்றி விளைகின்ற இன்பம் சிவனுக்கு ``வரம்பில் இன்பம்`` என்னும் குணமாய் இருத்தலின் ``குணமாம் சிரானந்தம்`` என்றும், அஃது அவனது நடனத்தில் பொங்கி வழிதலால் ``பூரித்து`` என்றும் கூறினார். ``தென்திை\\\\u2970?`` என்றது இங்குத் தில்லையை ஆதலின், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. தில்லையை அவன் தேர்ந்து கொண்டது, `அதன் சிறப்பு நோக்கி` என்றே கொள்ளப்படும். ``மாதவம் செய்த தென்றிை\\\\u2970?``9 எனச் சேக்கிழாரும் குறித்தருளினார். புரம் - திருமேனி; வடிவம். `பூவையும் தானுமாம் ஆனந்த போக புரனாய்` என்க. ஆனந்தம், சிவானந்தம். போகம் - உலக இன்பம். அவன் போக வடிவினனாய் இருந்து தரும் போகம் சிவானந்தத்திற்குத் தடையாகாமை பற்றி, ``ஆனந்த போகம்`` என்றார், மொழியின் இனிமை பற்றி மகளிரைக் `கிளி, பூவை` என உவம ஆகுபெயராற் கூறுதல் இலக்கிய வழக்கு. `நிர்` என்னும் உபசர்க்கம் நிலை பேற்றையும் உணர்த்தும், நிர்த்தாரணம் நிர்ணயம்` முதலியவற்றிற் போல. இம்மந்திரத்திற்குப் `பரஞ்சோதி` என்னும் எழுவாயை முன் மந்திரத்திலிருந்து கொள்க.
இதனால், தில்லைக் கூத்தினைச் சிவன் மேற்கொண்ட வகை -யும், அது போகம், மோட்சம் இரண்டையும் தருதலும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage