
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் 14. பொற்றில்லைக் கூத்து
பதிகங்கள்

நாதத் தினில் ஆடி நாற்பதத் தேஆடி
வேதத் தினில் ஆடித் தழல்அந்தம் மீதாடிப்
போதத் தினில் ஆடிப் புவனம் முழுதாடும்
தீதற்ற தேவாதி தேவர் பிரானே.
English Meaning:
Where He Dances SoloHe dances in Nada
He dances in the States Four1
He dances in Veda
He dances on the Fire`s2 top
He dances in Bodha3,
He dances in worlds all
He the Blemishless One,
The Lord of Celestials countless.
Tamil Meaning:
சொல்லுலகத்திற்கு முதலாகிய நாதத்திலும் அதன் காரியமாகிய நால்வகை வாக்குக்களிலும், அவ்வாக்குகளாய் வெளிப் படுகின்ற வேதாகமங்களிலும், அவற்றின்வழி வேட்கப்படுகின்ற வைதிகாக்கினி, சிவாக்கினி என்பவற்றின் கொழுந்திலும், உயிர்களின் அறிவிலும், எல்லா அண்டங்களிலும் ஆடுபவனாகிய சிவபிரான்,Special Remark:
(இதனை அடுத்துவரும் மந்திரத்தோடு கூட்டி முடிக்க.)Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage