
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் 14. பொற்றில்லைக் கூத்து
பதிகங்கள்

ஆறு முகத்தின் அதிபதி தான்` என்றும்
கூறு சமயக் குருபரன் தான் `என்றும்
தேறினர் தேறுத் திருவம் பலத்துள்ளே
வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே`.
English Meaning:
Guru Para Dance in Holy Temple``I am the Lord of Six Ways to God,
I am the Guru Supreme, religions speak of``,
Thus saying,
He chose the Holy Temple in South;
And there in resplendence dances,
With peer none to compare.
Tamil Meaning:
கூத்தப் பிரான் ஒரு திருமுகத்தையே கொண்டு, ஒருவனேயாய் இருப்பினும் `ஆறு திருமுகங்களையுடைய முழுமுதற் கடவுளும் தானே` எனவும், அநைத்துச் சமய முதல்வனும் தானே` எனவும் தனது திருநடனக் குறிப்பை உணர வல்லவர்கள் உணர்ந்து கொள்ளும்படி தில்லைத் திருவம்பலத்துள் எஞ்ஞான்றும் விளங்கி நிற்கின்றான்.Special Remark:
`உச்சியில் ஒன்றும், நான்கு திசைகளிலும் நான்கும் ஆக ஐந்து முகங்களையே உடையவனாய்ச் சிவபிரான் உலகத்தை ஐந்தொழிற்படுத்து நடத்துகின்றான் என்றே வேதாகமங்கள் கூறியபோதிலும், `அந்த ஐந்து திருமுகங்கள் வெளிப்படையாய் விளங்குவன` என்பதும், `கீழ்நோக்கிய ஒருமுகம் ஞானியரே உணரும் வண்ணம் மறைந்துள்ளது` என்பதும் வேதாகமத் துணிபுகள் என்பதை நாயனார் இரண்டாம் தந்திரத்து `அதோமுக தரிசனம்` என்னும் அதிகாரத்துள் குறிப்பால் உணர்த்தினமை காண்க. ஐந்து முகங்களும் பொதுவாக ஐந்தொழிலை இயற்றினும், அவரவர் விரும்பும் விருப்பத்தை நிறைவேற்றும் சிறப்புத் தொழில்களை அதோமுகம் செய்யும் என்க. அது தேவர் வேண்டுகோளுக்கு இரங்கி முருகனை அளித்த வரலாற்றால் நன்கு விளங்கும்.`தோற்றம் துடியதனில்` என்னும் உண்மை விளக்க வெண்பாவால் கூத்தப்பிரான் ஐம்முகம் செய்யும் ஐந்தொழில்களைச் செய்தல் விளங்கும். `வரைமகள்தான் காண்படியே`` எனவும், ``மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம் பலத்தே ஆதியும் நடுவும் இல்லா அற்புதத் தனிக்கூத்தாடும் - நாதனார்`` எனவும் பிற இடங்களிலும் ``பரா சத்தியில் ஆடி`` என முன் மந்திரத்திலும் கூறிய வாறு தேவியை உடன் கொண்டு, அவள் காண ஆடுதலே அதோமுகம் செய்யும் செயலைக் குறிக்கும். சமயங்கள் யாவும் அவற்றின் முதலாசிரியர்களாலே தோற்றுவிக்கப்படினும் அவர்களை அவ்வாறு தோற்றுவிக்கச் செய்தவனும் சிவனே யாதல் பற்றி, ``கூறு சமயக் குருபரன் தான்`` என்றார். அதுவும் அதோமுகச் செயல்களில் ஒன்றே என்க. வேறின்மை - நீங்குதல் இன்மை.
இதனால், தில்லைக் கூத்தபிரானே எல்லா மூர்த்திகலுமாய் நிற்றல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage