
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் 14. பொற்றில்லைக் கூத்து
பதிகங்கள்

தேவரொ டாடித் திருவம் பலத்தாடி
மூவரொ டாடி முனிகணத் தோடாடிப்
பாவினுள் ஆடிப் பராசத் தியில்ஆடிக்
கோவிலுள் ளாடிடும் கூத்தப் பிரானே.
English Meaning:
He Dances in Holy EnsembleHe dances with the Celestials,
He dances in the Holy Temple,
He dances with the Gods Three,
He dances with the assemblage of Munis,
He dances in song,
He dances in Parasakti
He dances in Jivas
He, the Lord of Dances.
Tamil Meaning:
கூத்துக் கோலம் உடையனாய், `கோயில்` எனப் -படும் தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் தேவர்களும், மூவர்களும், முனிவர்களும் வேதமும், தமிழும் பாட, உமையம்மைதன் கண்முன் ஆடுகின்றான்.Special Remark:
``ஆடி`` என வந்த செய்தென் எச்சங்கள் பலவும் எண்ணின்கண் வந்தன. வேதத்தைக் கூறவே ஆகமமும் அடங்கிற்று. ``நாதத்தில் ஆடி`` என்னும் மந்திரத்துள் `சிவன் உலகரால் அறியப் படாத பல இடங்களில் ஆடுபவன் என்பதைக் கூறி, ``தேவரொடாடி`` என்னும் மந்திரத்தில் `அத்தகையோன் நம்மனோரும் எளிதிற் கண்டு உய்யும்படி தில்லையில் உருவத் திருமேனி கொண்டு ஆடுகின்றான்` என்பதைக் கூறினார். `நாதம் முதலியவற்றில் ஆடுபவன் தில்லையில் தேவர் முதலியோர் சூழ அம்மைமுன் ஆடுகின்றான்` என ஒரு தொடரால் சுருங்கக் கூறிப் போகாமல், `ஆடி, ஆடி, ஆடி ... ... ... ஆடுகின்றான்` என பல தொடரால் விரியக் கூறினார் தில்லைக் கூத்தின் அருமையை வலியுறுத்தற்கு. யாண்டும் மந்திரங்களைக் குனகமாகச் செய்தார். இக்கூத்தின் பெருமை ஒரு செய்யுளில் அடங்காமை காட்டிச் சொல்லில் அடங்காமை தோற்றுவித்தற்குப் ``பராசத்தியில்`` என்பது `பரா சத்தி யிடத்தில்` என்னும் பொருட்டாய், `பரா சத்தி முன் னிலையில்` எனப் பொருள் தந்தது. `கோவிலுள் கூத்தப் பிரானாய்` என ஆக்கம் வருவித்து, ஆடிடும்` என முன்னே கூட்டி முடிக்க.இவ் இருமந்திரங்களாலும், `தில்லைக் கூத்தின் பெருமை சொல்லில் அடங்காதது` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage