ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
    உத்தமம் மிக்கிடில் ஓராறு திங்களாம்
    அத்தம் மிகுத்திட் டிரட்டிய தாயிடில்
    நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே. 
  • 10. அளக்கும் வகைநாலும் அவ்வழி ஓடில்
    விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும்
    துளக்கும் வகையைந்துந் தூய்நெறி ஓடில்
    களக்க மறமூன்றிற் காணலு மாமே. 
  • 11. காணலு மாகுங் கருதிய பத்தோடிற்
    காணலு மாகுங் கலந்த இரண்டையும்
    காணலு மாகுங் கலப்பற மூவைந்தேற்
    காணலு மாகுங் கருத்துற ஒன்றே. 
  • 12. கருதும் இருபதிற் காணஆ றாகும்
    கருதிய ஐயைந்திற் காண்பது மூன்றாம்
    கருதும் இருப துடன்ஆறு காணில்
    கருதும் இரண்டெனக் காட்டலு மாமே. 
  • 13. காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில்
    காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றெனக்
    காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற்
    காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே. 
  • 14. ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்
    பாரஞ்சி நின்ற பகைபத்து நாளாகும்
    வாரஞ்செய் கின்ற வகைஆறஞ் சாமாகில்
    ஓரஞ்சொ டொன்றொன் றெனவொன்றும் நாளே. 
  • 15. ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற்
    கன்றிய நாளுங் கருத்துற மூன்றாகும்
    சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின்
    மன்றியல் பாகு மனையில் இரண்டே. 
  • 16. மனையினில் ஒன்றாகும் மாதம்மும் மூன்றும்
    சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி
    வினையற ஓங்கி வெளிசெய்து நின்றால்
    தனையுற நின்ற தலைவனு மாமே. 
  • 17. ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை
    ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை
    ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்
    ஆரு மறியா அறிவறிந் தேனே. 
  • 18. அறிவது வாயுவொ டைந்தறி வாய
    அறிவா வதுதான் உலகுயிர் அத்தின்
    பிறிவுசெய் யாவகை பேணிஉள் நாடிற்
    செறிவது நின்று திகழும் அதுவே. 
  • 19. அதுவரு ளும்மரு ளான துலகம்
    பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளும்
    மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி
    இதுவருள் செய்யும் இறைஅவ னாமே. 
  • 2. ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்
    ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர்
    ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
    ஓசை உணர்ந்த வுணர்வது வாமே.
  • 20. பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
    குறிப்பது கூடிய கோலக் குரம்பைப்
    பழப்பதி யாவது பற்றறும் பாசம்
    அழப்படி செய்வார்க் ககலும் மதியே. 
  • 3. ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
    நாமே உறைகின்ற நன்மை அளித்திடும்
    பூமேல் உறைகின்ற போதகம் வந்திடும்
    தாமே உலகில் தலைவனு மாமே. 
  • 4. தலைவன் இடம்வலஞ் சாதிப்பார் இல்லை
    தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல்
    தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில்
    தலைவன் இடம்வலந் தன்வழி நூறே. 
  • 5. ஏறிய ஆறினில் எண்பது சென்றிடும்
    தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில்
    ஆறொரு பத்தாம் அமர்ந்த இரண்டையுந்
    தேறியே நின்று தெளிஇவ் வகையே. 
  • 6. இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில்
    அவ்வகை ஐம்பதே யென்ன அறியலாம்
    செவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின்
    முவ்வகை யாமது முப்பத்து மூன்றே. 
  • 7. மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடில்
    எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும்
    ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற்
    பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே. 
  • 8. பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில்
    ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப்
    போக்கலு மாகும் புகலற ஒன்றெனில்
    தேக்கலு மாகுந் திருத்திய பத்தே. 
  • 9. ஏயிரு நாளும் இயல்புற ஓடிடிற்
    பாயிரு நாலும் பகையற நின்றிடும்
    தேய்வுற மூன்றுந் திகழவே நின்றிடில்
    ஆயுரு வாறென் றளக்கலு மாமே.