
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 15. ஆயுள் பரீட்சை
பதிகங்கள்

கருதும் இருபதிற் காணஆ றாகும்
கருதிய ஐயைந்திற் காண்பது மூன்றாம்
கருதும் இருப துடன்ஆறு காணில்
கருதும் இரண்டெனக் காட்டலு மாமே.
English Meaning:
Visions of the 20th, 25th and 26th DaysOn the twentieth day
The Sixth Adhara (Ajna) will visioned be;
On the twenty-fifth day
The Three Mandalas (Sun, Moon and Fire) will visioned be;
On the twenty-sixth day
The Two, Siva and Sakti, will visioned be.
Tamil Meaning:
பிராண வாயு இருபது நாள் இடைநாடி வழியே இயங்கினால், வாழ்நாள் ஆறு திங்களாம். இருபத்தைந்து நாள் இயங்கினால் மூன்று திங்களாம். இருபத்தாறுநாள் இயங்கினால் இரண்டு திங்களாம்.Special Remark:
ஆறு முதலியவை, `திங்கள்` என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது.இதனால், அம்முறை மற்றும் மூன்று கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage