
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 15. ஆயுள் பரீட்சை
பதிகங்கள்

ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
நாமே உறைகின்ற நன்மை அளித்திடும்
பூமேல் உறைகின்ற போதகம் வந்திடும்
தாமே உலகில் தலைவனு மாமே.
English Meaning:
Course Breath Upward and See Light of JnanaThe breath that is in vain spent
If turned upward to flow
Will give the good that of fixity of mind comes;
The Jnana that comes from cranial spaces will beam;
And the yogi becomes Lord of earth.
Tamil Meaning:
ஒவ்வொரு மூச்சிலும் பிராண வாயு அழிதலை அறியும் அறிவு உண்டாகுமாயின், அது பயனுடையதாகும். அஃதாவது, நாம் நெடுங்காலம் இவ்வுலகில் வாழ்கின்ற நன்மையைக் கொடுக்கும். அதனால், ஆதார கமலங்களில் நிலைத்து நிற்றற்குரிய ஞானமும் கைவரும். அந்த ஞானம் கைவரப் பெற்றோர் உலகில் கட் புலனாய் நிற்கின்ற இறைவனாகி நிற்கும் பெருமையையும் அடைவர்.Special Remark:
எனவே, `வாயுப் பயிற்சி உடையவரை அத்தன்மை உடையவராக அறிக` என்பது குறிப்பெச்சம். போதம் - ஞானம்.இதனால், வாயுப்பயிற்சி ஒன்றேயும் வாழ்நாள் குறை படாமைக்குக் குறியாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage