
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 15. ஆயுள் பரீட்சை
பதிகங்கள்

ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற்
கன்றிய நாளுங் கருத்துற மூன்றாகும்
சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின்
மன்றியல் பாகு மனையில் இரண்டே.
English Meaning:
On the 31st Day and 32nd DayOn the thirty-first day of the journey upward,
Three the days that still delay the union
On thirty-second day that Prana takes to reach,
Two the days that are still in the way.
Tamil Meaning:
பிராண வாயு இடை நாடி வழியே முப்பத்தொரு நாள் இயங்குமாயின், வாழ்நாள் அப்பால் மூன்று நாளே. முப்பத் திரண்டு நாள் இயங்கின், அப்பால் இரண்டு நாளில் அவ்வுயிர் உடலை விட்டுச்செல்ல, அது வாழ்ந்த இல்லத்தில் பலர் கூடி ஒலிக்கின்ற மன்றத்தின் இயல்பு தோன்றுவதாகும்.Special Remark:
கன்றிய நாள் - உயிர் உடலில் அழுந்தியிருக்கும் நாள். ``சென்று`` என்பது, `செல்ல` என்பதன் திரிபு.இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage