
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 15. ஆயுள் பரீட்சை
பதிகங்கள்

இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில்
அவ்வகை ஐம்பதே யென்ன அறியலாம்
செவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின்
முவ்வகை யாமது முப்பத்து மூன்றே.
English Meaning:
Exhalation for Ages 50 and 33If to eight matras Prana runs out
Through nostril left
Fifty the age; know you;
If nine, leaving three matras inside,
Thirty and three be the age.
Tamil Meaning:
பிராண வாயு மேற்கூறிய வகையில், `ஒன்று, எட்டு` என்னும் முறையில் இயங்கினால், `வாழ்நாள் ஐம்பதாண்டே` என்று அறியலாம். இனி, `ஒன்று, ஒன்பது` என்ற முறையில் இயங்கினால் அது முப்பத்து மூன்றாண்டேயாம்.Special Remark:
முவ்வகையாம் - மூன்று கூற்றில் ஒரு கூறாகின்ற `அது, முவ்வகையாம் முப்பத்து மூன்றே` என மாற்றுக.இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage