
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 15. ஆயுள் பரீட்சை
பதிகங்கள்

அளக்கும் வகைநாலும் அவ்வழி ஓடில்
விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும்
துளக்கும் வகையைந்துந் தூய்நெறி ஓடில்
களக்க மறமூன்றிற் காணலு மாமே.
English Meaning:
Vision of the First Adharas on the Fourth and Fifth DayIf thus the practice is for days four continued,
The four petalled Muladhara will visioned be;
If further continued,
On the fifth day,
The Second and third adharas visioned are.
Tamil Meaning:
வாழ்நாளை அளந்தறிகின்ற வகையில் நான்கு நாள்கள் பிராணவாயு இடைகலை வழியே இயங்கின், நான்கு ஆண்டுகள் உயிர் உடலிற் பொருந்தி நிற்கும். ஐந்து நாள் அவ்வாறு இயங்கின், தெளிவாக மூன்றாண்டு அளவில் வாழ்நாள் எல்லையைக் காணலாம்.Special Remark:
`கலக்கம்` என்பது திரிந்து நின்றது.இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage