
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 15. ஆயுள் பரீட்சை
பதிகங்கள்

பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில்
ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப்
போக்கலு மாகும் புகலற ஒன்றெனில்
தேக்கலு மாகுந் திருத்திய பத்தே.
English Meaning:
Kumbhaka of Ten Matras Leads to ConcentrationBreathing inward in measure twelve
The ten may you retain inside
And direct into oneness upward;
Thus may you practise
The entire day of thirty naligas!
Tamil Meaning:
பிராணவாயு பகல் முப்பது நாழிகையும் இடநாடி வழியே வெளிப்போதுமாயின், `வாழ்நாள் பன்னிரண்டாண்டு` என்று வரையறுத்துவிடலாம். அதனை அநுபவமாகவும் காண முடியும். இடையே மாற்றம் புகாதொழிய ஒருநாள் முழுதும், (அஃதாவது அறுபது நாழிகை) பிராணவாயு இடை நாடி வழியே உள்வந்து வெளிச் செல்லுமாயின், `வாழ்நாள் இனிப் பத்தாண்டு` என்று துணியலாம்.Special Remark:
`பகல் முப்பதும் ஆகில், ஆறிரண்டை ஆக்கலும் ஆகும்; பார்க்கலும் ஆகும்` என்க. `புகல் அற, ஒன்று உள்ளிட்டுப் போக்கலும் ஆகும் எனில்` என மாற்றுக. ஒன்று, ஒருநாள். தேக்கல் - நிலைநாட்டல்.இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage