
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 15. ஆயுள் பரீட்சை
பதிகங்கள்

மனையினில் ஒன்றாகும் மாதம்மும் மூன்றும்
சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி
வினையற ஓங்கி வெளிசெய்து நின்றால்
தனையுற நின்ற தலைவனு மாமே.
English Meaning:
Jiva`s Union in God on 33rd DayThus when Prana reaches the cranial heights
In a month and three days;
From within the fountain of nectar
Nandi bellows aloud;
If in the space within He reveals Himself,
You shall truly be one in Lord.
Tamil Meaning:
உயிர் வளர்கின்ற மாதங்கள் முதற்கண் ஓர் அறை யில் ஒன்பதும், பின் நீர்க்குட்டத்தில் ஒன்றும் என்று எங்கள் நந்தி பெருமான் திருவாய் மலர்ந்தருளினார். (அஃதாவது தாயின் வயிற்றில் ஒன்பது மாதம் உருப்பெற்று வளர்ந்து, பத்தாம் மாதம் நீரில் மிதந்து கிடக்கும் என்றவாறு) பத்தாம் மாதம் அவ்விடத்தை விட்டு அகன்று திருவருள் உணர்வோடு சிறப்புற்று வெளிவருமாயின், அது தன்னைப் பெறுதலாகிய பேற்றினால் உலகர்க்குத் தலைவனாதலும் கூடும்.Special Remark:
எனவே, `அவ்வாறின்றி வினைவயப்பட்டே வெளி வருமாயின், அளவற்ற உயிர்களுள் தானும் ஒன்றாய், மேற்கூறிய வாழ்நாள் எல்லைகளுள் ஒன்றைப் பெற்றுக் கழியும்` என்றதாயிற்று. ஒன்றாகும் - பொருந்துதல் உடையதாம்.இதனால், யோக முயற்சி முன்னைத் தவம் உடையார்க்கே கூடும் என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.
தவமும் தவமுடையார்க் காகும்; அவம் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
-குறள், 262
என்றார் திருவள்ளுவ நாயனாரும்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage