ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா
    கழுநீர் விடாய்த்துத்தங் காயஞ் சுருக்கும்
    முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்
    செழுநீர்ச் சிவன்றன் சிவானந்தத் தேறலே. 
  • 10. தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாக்கிப்
    பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போக்கியே
    மெய்த்த சுகமுண்டு விட்டுப் பரானந்தச்
    சித்திய தாக்குஞ் சிவானந்தத் தேறலே. 
  • 11. யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
    போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
    மோகியர் கள்ளுண்டு மூடராய் மோகமுற்
    றாகும் மதத்தால் அறிவழிந் தாரே.
  • 2. சித்தம் உருக்கிச் சிவமாஞ் சமாதியில்
    ஒத்த சிவானந்தத் தோவாத தேறலைச்
    சுத்தமது வுண்ணச் சுவானந்தம் விட்டிடா
    நித்தல் இருத்தல் கிடத்தல்கீழ்க் காலே. 
  • 3. காமமும் கள்ளுங் கலதிகட் கேயாகும்
    மாமல முஞ்சம யத்துள் மயலுறும்
    போமதி யாகும் புனிதன் இணையடி
    ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே. 
  • 4. வாமத்தோர் தாமும் மதுவுண்டு மாள்பவர்
    காமத்தோர் காமக்கள் ளுண்டே கலங்குவர்
    ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்
    நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே. 
  • 5. உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
    வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுறார்
    தெள்ளுண்மை ஞானச் சிவயோகஞ் சேர்வுறார்
    கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே. 
  • 6. மயக்குஞ் சமய மலமன்னும் மூடர்
    மயக்கும் மதுவுண்ணும் மாமூடர் தேறார்
    மயக்குறு மாமாயை மாயையின் வீடும்
    மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.
  • 7. மயங்குந் தியங்குங்கள் வாய்மை அழிக்கும்
    இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி
    முயங்கும் நடங்கொண்ட ஞானத்து முந்தார்
    இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே.
  • 8. சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
    சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
    சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
    சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே. 
  • 9. சத்தன் அருள்தரிற் சத்தி அருளுண்டாம்
    சத்தி அருள்தரிற் சத்தன் அருளுண்டாம்
    சத்தி சிவமாம் இரண்டுந்தன் னுள்வைக்கச்
    சத்தியம் எண்சித்தித் தன்மையு மாமே.