
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை
பதிகங்கள்

மயக்குஞ் சமய மலமன்னும் மூடர்
மயக்கும் மதுவுண்ணும் மாமூடர் தேறார்
மயக்குறு மாமாயை மாயையின் வீடும்
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.
English Meaning:
The fools who swear by the faith that our senses numbs,Who yield to the heady joys of drink—they neither seek nor see
Mamaya`s Home, for the Maya`s fetters are they bound;
But recovered from Maya`s hold, they merge in the Lord and are free.
Tamil Meaning:
மயக்கத்தைத் தருகின்ற மயக்க நோய், மயக்கம் இல்லாதாரையும் மயங்கச் செய்யும் மருந்தால் நீங்கும் எனக் கூறுவார் கூற்றைத் தெளிந்து அம்மருந்தை உண்ணின் உண்டாவது பெரு மயக்கமேயன்றி வேறுண்டோ! இல்லை. அதுபோல, `உலகப் பற்றாகிய மயக்கம், அறிவை மயக்குவதாகிய கள்ளினால் நீங்கும் எனக் கூறி மயக்குகின்ற அறியாமையையுடைய சமயத்தில் உறைத்து நிற்கும் அறிவிலிகள், அவ்வறியாமையால் அறிவை அழிக்கும் கள்ளை உண்டு மேலும் பேரறியாமையில் அழுந்துவர்; அவரைத் தெளிவித்தல் இயலாது.Special Remark:
பின்னிரண்டு அடிகளை முதலிற் கொண்டு உரைக்க. `மலச் சமயம்` என்பது பின்முன்னாக நின்றது, ``தேறார்`` என்பது வேறு முடிபு. ``மாமாயை`` என்பதும், ``மாயை`` என்பதும் மாயைபோல மயக்கும் நோயையும், மருந்தையும் குறித்தன. இன், ஏதுப்பொருளில் வந்த ஐந்தாம் உருபு. ``வீடும்`` என்பதன் பின், `என்னும்` என்பது வருவிக்க. மயக்கு - மயக்க உரை. தெளியின் - தெளிவு கொண்டால். அன்றே, தேற்றம். `மாயை மாயையால் நீங்கும்` என்றல், `நோய் நோயால் நீங்கும்` என்றல்போலும் என்பது கருத்து.களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று. -குறள், 929
என்றவாறு, கள்ளுண்பார்க்கே உண்மை தெளிவித்தல் கூடாதபொழுது `அது சமய ஒழுக்கம்` என்பாரைத் தெளிவித்தல் எவ்வாறு கூடும் என்பார், ``தேறார்`` என்று அறுதியிட்டுக் கூறினார்.
இவை நான்கு திருமந்திரங்களானும், `கள்ளுண்டல் சமய ஒழுக்கமே` என்பாரது கூற்று அடாது என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage