
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை
பதிகங்கள்

உள்ளுண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுறார்
தெள்ளுண்மை ஞானச் சிவயோகஞ் சேர்வுறார்
கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே.
English Meaning:
"The one who consumes deceit will not understand the interpretations of the scriptures of the Vama sect, which is a divine path. The three concepts mentioned in the Shiva Agamas, namely 'Padi, Pashu, and Pasha,' entail realizing the truth and, through that realization, aspiring to receive the grace of the supreme being known as Padi. From that aspiration, through sadhana and the practices of Kriya Yoga, one can attain the clear knowledge of Shiva, which is the true essence gained from the experience of death. By that clarity of Shiva knowledge, one can engage in divine service, becoming united with Shiva, and thereby attain bliss without end."Tamil Meaning:
கள்ளினை உண்டு களிக்கும் அவைதிகராகிய வாம மார்க்கத்தவர் வேதாகமங்களின் கருத்துக்களை உணரமாட்டா மையின், `சுரௌதம்` எனப்படும் திவ்வியாகமங்களாகிய சிவாகமங் களில் சொல்லப்பட்ட `பதி, பசு, பாசம்` என்னும் மூன்று பொருள்கள் உண்மையை உணர்தலும், அவ்வுணர்வால் அவற்றுள் மேலான வனாகிய பதியின் அருளைப் பெற விழைதலும், அவ்விழைவால் சரியை கிரியா யோகங்களாகிய இறப்பில் தவத்தில் நின்று அதன் பயனாகத் தெளிந்த உண்மை ஞானமாகிய சிவஞானத்தைப் பெறு தலும், அச்சிவஞானத் தெளிவினால் சிவனோடு ஏகமாகிய இறைபணி நின்று இன்புறுதலும் இலராவர்.Special Remark:
ஈற்றடியை முதலிற் கொண்டு, `ஆதலின்` என்பது வருவித்து உரைக்க. சைவாகம ஞானபாதப் பொருள் அடைவைக் கூறி, அப் படிமுறையானே சைவ சமயிகள் பெரும்பயன் பெறு தலையும், தாந்திரிகர்க்கு (தந்திரமார்க்கத்தவர்க்கு) அது கூடாமையும் விளக்கு முகத்தால் அவர் விரும்பும் கள்ளுண்டலை விலக்கினார் என்க. உள்ளாயவற்றை `உள்` என்றார்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage