ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. பரம குரவன் பரம்எங்கும் ஆகி
    திரம்உற எங்கணும் சேர்ந்தொழி வற்று
    நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம்
    அரிய துரியத் தணைந்துநின் றானே.
  • 10. உரையற்ற ஆனந்த மோனசொரூ பத்தன்
    கரையற்ற சத்திஆதி காணில் அகாரம்
    மருவுற் றுகாரம் மகாரம தாகி
    உரையற்ற தாரத்தில் உள்ளொளி யாமே.
  • 11. ஆமா றறிந்தேன் அகத்தின் அரும்பொருள்
    போமா றறிந்தேன் புகுமாறும் ஈதென்றே
    ஏமாப்ப தில்லை இனிஓர் இடமில்லை
    நாமாம் முதல்வனும் நாமென லாமே.
  • 2. குலைக்கின்ற நீரிற் குவலயம் நீரும்
    அலைக்கின்ற காற்றும் அனலொடா காசம்
    நிலத்திடை வானிடை நீண்டகன் றானை
    வரைத்து வலஞ்செயு மாறறி யேனே.
  • 3. அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள்
    எங்குநின் றாரும் இறைவனென் றேத்துவர்
    தங்கிநின் றான்தனி நாயகன் எம்மிறை
    பொங்கிநின் றான்புவ னாபதி தானே.
  • 4. சமையச் சுவடும் தனைஅறி யாமல்
    கமையற்ற காமாதி காரணம் எட்டும்
    திமிரச் செயலும் தெளியுடன் நின்றோர்
    அமரர்க் கதிபதி யாகிநிற் பாரே.
  • 5. மூவகைத் தெய்வத் தொருவன் முதல்உரு
    ஆயது வேறாம் அதுபோல் அணுப்பரன்
    சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற
    ஏயும் நெறியென் றிறைநூல் இயம்புமே.
  • 6. உருவன்றி யேநின் றுருவம் புணர்க்கும்
    கருவன்றி யேநின்று தான்கரு வாகும்
    மருவன்றி யேநின்ற மாயப் பிரானைக்
    குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே.
  • 7. உருவம் நினைப்பவர்க்(கு) உள்ளுறும் சோதி
    உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்
    உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்
    உருவம் நினைப்பார் உலகத்தில் யாரே.
  • 8. பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றப்
    பரஞ்சோதி என்னுட் படிந்ததன் பின்னைப்
    பரஞ்சோதி யுள்நான் படியப் படியப்
    பரஞ்சோதி தன்னைப் பறையக்கண் டேனே.
  • 9. சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி
    அரியன உற்பலம் ஆமாறு போல
    மருவிய சத்தியாதி நான்கும் மதித்த
    சொரூபக் குரவன் சுகோயத் தானே.