
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 19. சொரூப உதயம்
பதிகங்கள்

உருவம் நினைப்பவர்க்(கு) உள்ளுறும் சோதி
உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்
உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்
உருவம் நினைப்பார் உலகத்தில் யாரே.
English Meaning:
Meditation on God`s ManifestnessThey who meditate on His Svarupa,
See Him as the light within;
They who meditate on His Svarupa,
Will Timeless Eternity attain;
They who meditate on His Svarupa,
Will with Celestials be;
Yet who does seek His Svarupa true
In the world here below?
Tamil Meaning:
குருவின் உருவத்தை உள்ளத்தில் உள்கியிருப்பவர் கட்கு அங்குச் சிவ சோதியே பிரகாசிக்கும். அவர்கள் ஊழிக் காலம் நிலவுலகில் வாழ்வர்; பின்பு சிவலோக வாழ்வினரும் ஆவர். அங்ஙன மாகவும் குரு உருவத்தின் சிறப்பை அறிந்து அதனை உள்ளத்தில் உள்குவோர் உலகத்தில் எத்துணைப் பேர்!Special Remark:
உருவம், அதிகாரத்தால் குரு உருவேயாயிற்று. `மணி மந்திர ஔடதங்களாலும், மற்றும் அடயோகம் முதலிய உழைப்புக் களாலும் அடையும் பயனை ஞான குருவால் அடையலாம்; ஆனால் ஞான குருவால் அடையும் பயனை வேறு வழியால் அடைய இயலாது` என்பது உணர்த்துதற்கு இவ்வாறு கூறினார்.``மந்திரத்தால், மருந்துகளால், வாய்த்தஇயோ கத்தால்,
மணியிரத குளிகையினால், மற்றும் மற்றும்
தந்திரத்தே சொனைமுறை செய்ய, வேத
சகலகலை ஞானங்கள், திரிகால ஞானம்,
அந்தமிலா அணிமாதி ஞானங்கள் எல்லாம்
அடைந்திடும்; ஆசான் அருளால் அடிசேர் ஞானம்
வந்திடும்; மற்றொன்றாலும் வாரா தாகும்;
மற்றவையும் அவன்அருளால் மருவு மன்றே``*
என்னும் சிவஞான சித்தியைக் காண்க. இதன்கண் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.
இதனால், சொரூபத்தியானத்தின் சிறப்பு உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage